அமைச்சர் டான்: தந்தையரே, குடும்பத்துக்கு நேரம் ஒதுக்குக

தந்தையர்கள் தங்கள் குடும்பத் துடன் செலவிட நேரத்தை ஒதுக்கவேண்டும் என்று வலி யுறுத்தப்பட்டுள்ளது. இதற்குத் தகுந்தாற்போல் அவர்கள் குடும்பத்தை மையமாக வைத்து வேலைகளை வரையறுத் துக்கொள்ள வேண்டும் என்றும் வெறுமனே மிச்சமீதி நேரத்தை குடும்பத்துக்காக ஒதுக்கினால் போதும் என்ற மனப்போக்கை, பழக்கத்தை அவர்கள் சார்ந் திருக்கக்கூடாது என்றும் சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டான் சுவான் ஜின் தந்தையர் களை வலியுறுத்தினார். “வாழ்க்கையில் குடும்பமே முக்கியம். அதற்கே முன்னுரிமை என்று அடிக்கடி நாம் கூறுகிறோம். ஆனால் அப்படி நாம் செய்கிறோமா என்று அமைச்சர் கேட்டார்.

“முடிந்த வரையில் குடும்பத்தை மையமாக வைத்து நம்முடைய பணிகளை நாம் திட்டமிட்டுக் கொள்ள வேண்டியது இதில் முக் கியமானது,” என்றார் அமைச்சர். “இது எப்பொழுதுமே எளிதல்ல. ஆனால் போதுமான அளவுக்கு கடுமையாக நாம் முயன்றால் நமக்கே வியப்பு ஏற்பட்டுவிடும். அந்த அளவுக்கு நாம் பலவற்றையும் செய்யலாம்,” என்று அமைச்சர் குறிப்பிட்டார். தந்தையர் தின புறக்கேளிக்கை நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்து கொண்டார். அப்போது அவர் ஊடகங்களிடம் பேசினார்.