‘என்டியுசி சமூக நிறுவனத்துக்கு அரசாங்க சலுகைகள் கிடையாது’

தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (என்டியுசி) நிர்வகித்து நடத்தும் சமூக நிறுவனங்கள் சந்தைக் கோட்பாடுகளின் பேரில் செயல் படுகின்றன. அவை இதர வர்த்தக நிறுவனங்களைப் போலவே இடங் களுக்கும் ஒப்பந்தங்களுக்கும் போட்டிப்போட வேண்டிய நிலை இருக்கிறது என்று காங்கிரசின் தலைமைச் செயலாளர் சான் சுன் சிங் வலைத்தளம் ஒன்றில் நேற்று தெரிவித்தார். தேசிய தொழிற்சங்கக் காங்கிர சின் சமூக அமைப்புகளுக்கு அரசாங்கத்திடமிருந்து சலுகைகள் கிடைக்கின்றன என்ற பொதுவான ஒரு தப்பெண்ணம் நிலவுகிறது. இதை தெளிவுப்படுத்த வேண் டிய தேவை இருக்கிறது என்றார் அவர். "சமூக நிறுவனங்களாக இருப்பதால் வருவாயில் பெரும் பகுதி நாட்டுக்கான சேவையை விரிவுப்படுத்த மறுமுதலீடு செய்யப் படுகிறது.

"இதன் காரணமாக மக்க ளுக்கு அதிகமானவற்றைச் செய்ய முடிகிறது," என்று அவர் விளக்கி னார். என்டியுசியின் சமூக நிறு வனங்களில் விலைகள் சக போட்டி நிறுவனங்களைவிட கணி சமான அளவுக்கு ஏன் குறைவாக இருப்பதில்லை என்பதை அவர் விளக்கினார். "ஒரு துறையில் என்டியுசி சமூக நிறுவனம் ஒன்று இருக் கிறது என்றால் அது போட்டி நிறு வனங்கள் நிர்ணயிக்கக்கூடிய விலைக்குக் கடிவாளத்தை போட முடியும். போட்டி நிறுவனங்கள் என்டியுசி நிறுவனங்களின் விலைகளுக்கு ஏற்ப விலைகளை நிர்ண யிக்க முயல்கின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!