பிள்ளை கொடுமை: மாது, காதலர் மீது குற்றச்சாட்டு

புளோக் ஒன்றின் ஆறாவது மாடியில் அமைந்துள்ள ஓரறை வாடகை வீட்டில் வசித்து வந்த சைதா, 41, என்ற மாதும் அந்த மாதின் காதலரான சைனி ஜமாரி, 46, என்ற ஆடவரும் அந்த மாதின் முகம்மது டேனியல் முகம்மது நாசர் என்ற இரண்டு வயது பிள்ளையைக் கொடுமைப் படுத்திவந்தனர். 2015 நவம்பர் 23ஆம் தேதி அந்தப் பிள்ளை இறந்துவிட்டது.

அதற்காக அந்த தாயார் நீதிமன் றத்தில் வருத்தம் எதையும் வெளிப்படுத்தவில்லை. இந்தச் சம்பவம் பற்றிய விசாரணையை அடுத்து அந்த மாதும் அவரின் காதலரும் குற்றவாளிகள் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறார்கள். ஜூலை 5ஆம் தேதி அவர் களுக்குத் தண்டனை விதிக்கப் படும். அந்த வீட்டில் சக்கர நாற் காலியில் வசித்து வந்த திருவாட்டி புஷ்பவதி அப்துல் ரசாத், 51, என்ற மாது தான் அந்தப் பிள்ளைக்கு உதவ எவ்வளவோ முயன்றும் பலன் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.