இரு புதிய துணைத் தலைமை நிர்வாகிகள்

சிங்கப்­பூர் பிரஸ் ஹோல்­டிங்ஸ் நிறு­வ­னத்தின் மூத்த நிர்வாகி களான திரு பேட்ரிக் டேனியலும் திரு ஆண்டனி டானும் துணைத் தலைமை நிர்வாக அதி­கா­ரி­களாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர். தற்போது எஸ்­பி­எச்­சின் ஆங்­கி­லம், மலாய், தமிழ் ஊடகப் பிரி­வுக்­குத் தலைமை ஆசி­ரி­ய­ராக இருக்­கும் 61 வயது திரு பேட்ரிக் டேனி­ய­லும் சீன ஊடகக் குழு­மத்­தின் நிர்வாக துணைத் தலை­ வ­ரா­க­வும் ஊடக உத்தி, ஆய்வுப் பிரிவின் தலை­வ­ரா­க­வும் இருக்­கும் 43 வயது திரு ஆண்டனி டானும் துணைத் தலைமை நிர்­வா­கிக­ளாக ஜூலை முதல் தேதி பொறுப்­பேற்­பர். அவர்­கள் எஸ்­பி­எச்­சின் தலைமை நிர்வாக அதி­கா­ரி­யான 63 வயது அலென் சானின் கீழ் பணி­பு­ரி­வர். ஆங்­கி­லம், மலாய், தமிழ் ஊடகப் பிரி­வுக்­குத் தலைமை ஆசி­ரி­ய­ராக 50 வயது வாரன் ஃபெர்னாண்டஸ் பொறுப்­பேற்­பார். ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்­தி­ரிகை­யின் ஆசி­ரி­யர் பதவியை­யும் அவர் தொடர்­வார்.

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்­தி­ரிகை­யின் துணை ஆசி­ரி­ய­ரான திருமதி சுமிகோ டான், 52, பத்­தி ­ரிகையின் நிர்வாக ஆசி­ரி­ய­ர் ஆ­கிறார் (ex­e­c­u­ti­ve edi­t­or). ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸின் நிர்வாக ஆசி­ரி­ய­ரான (ma­n­a­gi­ng edi­t­or) இக்­னே­‌ஷி­யஸ் லோ, 43, ஆங்­கி­லம், மலாய், தமிழ் ஊடகப் பிரிவின் நிர்வாக ஆசி­ரி­யர் பொறுப்­பேற்­கிறார். நேற்று அறி­விக்­கப்­பட்ட இந்த மாற்­றங்களை எஸ்­பி­எச் குழு­ம­த்­தின் செயல்­பாடு­களை வலு­வாக்கி, அடுத்தநிலைக்கு எடுத்­துச்செல் லும் நோக்கில் மேற்­கொள்­ளப்­ பட்­டுள்ள தலைமைத்­து­வத் தொடர்ச்­சித் திட்டம் என்று திரு அலென் சான் குறிப்­பிட்­டார். "பேட்ரிக், ஆண்டனி இரு­வ­ரும் மூத்த நிர்­வா­கக் குழுவின் முக்கிய உறுப்­பி­னர்­கள். எஸ்­பி­எச்­சில் 30 ஆண்­டு­கால அனு­ப­வ­முள்ள ஊடகத் துறை ஜாம்ப­வான் பேட்ரிக். ஆண்டனி புதிய பார்வை­களை­யும் யோசனை­களையும் கொண்டுள்­ள­வர்," என்றார் அவர்.

"எங்கள் தொழிலில் உள்ள சவால்­களை­யும் வாய்ப்­பு­களை­யும் எதிர்­கொள்­வ­தில் இரு­வ­ரும் என்­னு­டன் அணுக்­க­மா­கப் பணி­யாற்றி, எஸ்­பி­எச்சை மேலும் உய­ரங் களுக்குக் கொண்டு செல்வர்," என்று திரு சான் நம்­பிக்கை தெரி­வித்­தார். உலக ஊடகத் தொழிலில் வெற்­றி­யா­ளா­ரா­கத் திகழும் வகையில் எஸ்­பி­எச்­சின் ஊடகச் செயல்­பாடு­களை வலுவான அடித்­த­ளத்­தில் வைத்­தி­ருப்­பதே தமது முக்கிய இலக்கு என்று கூறினார் திரு பேட்ரிக் டேனியல். "ஊடகத் தொழில் மின்னிலக்க மாற்றங்கள், புத்தாக்கத்தின் பல அலைகளின் தாக்குதலைத் தாக் குப்பிடித்தது," என்ற திரு பேட்ரிக், "ஆனால், வாடிக்கையாளர்களுக்கு பெறுமதி தரக்கூடிய முழுமையான பல்லூடக, பலதள அமைப்பாவதை நாங்கள் விரைவுபடுத்த வேண் டும்," எனக் குறிப்பிட்டார்.

எஸ்­பி­எச்­சில் 1986ஆம் ஆண்டு சேர்ந்த திரு பேட்ரிக், ஆங்­கி­லம், மலாய், தமிழ் ஊடகப் பிரி­வு­டன் விளம்ப­ரப் பிரிவு, மின்­னி­லக்கம், தகவல் தொழில்­நுட்­பப் பிரிவு போன்ற ஏனைய முக்கிய பிரி­வு­களின் மேற்­பார்வை­யா­ள­ரா­க­வும் தொடர்­வார். ஆங்­கி­லம், மலாய், தமிழ் ஊடகப் பிரிவின் கீழ் தமிழ் முரசு இடம்­பெ­று­கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!