வெளிநாடு செல்வோருக்கு வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தல்

இறால் பாதுகாப்பானதே: செங்காங் ஈரச் சந்தை இறால் குறித்த புகாருக்கு ஆணையம் பதில் செங்காங் ஈரச் சந்தையில் விற்கப்பட்ட இறால் குறித்த புகாருக்கு பதிலளித்த ஆணையம், அந்த இறால் சாப்பிடுவதற்கு ஏற்றதே, அதில் வெளியாகும் ஒருவித கண்ணாடிக் குமிழ் அந்த இறாலின் ஒரு பகுதியே என்று கூறியுள்ளது. செங்காங் ஈரச் சந்தை­யில் கடந்த வாரம் விற்­கப்­பட்ட இறால் வழக்­கத்­திற்கு மாறாக இருந்தது என­வும் அதன் தலைப் பகு­தி­யில் முட்டை முட்டை­யா­கக் கண்­ணா­டிக் குமிழ் போல் காணப்­பட்­ட­தா­கவும் கூறப்­பட்­டது. இது குறித்து வேளாண் உணவு, கால்­நடை ஆணை­யத்­திற்­குப் புகார் வந்த­தா­க­வும் ஆணை­யம் அது குறித்து விசா­ரணை மேற்­கொண்­டுள்­ள­தா­கக் கூறி­யது. இறா­லின் எடை கூடு­வ­தற்­காக ஜெலட்­டின் எனப்­படும் ஊண்­பசை செலுத்­தப்­பட்­டுள்­ளதா என்­பது பற்றி ஆணை­யம் சோதனை மேற்­கொண்­டுள்­ளது.

கடந்த வாரம் திரு­மதி ஹுவாங் என்­ப­வர், செங்காங் ரிவர்­வேல் பிளா­சா­வில் உள்ள ஈரச்­சந்தை­ யில் தான் வாங்கி வந்த இறாலை சுத்தம் செய்­யும்­போது இறா­லில் ஒரு வகை பசை ஒட்­டி­யி­ருப்­பதைக்­ கண்டார். சுத்தம் செய்த பின்னர் இறால்­களை கொதி நீரில் போட்டு வேக வைத்­த­தும் அத­னு­டன் ஒட்­டி­யி­ருக்­கும் அந்தப் பசைக் குமிழ்­கள் ரப்­பரை போன்று கெட்­டி­யாகி விட்டது என ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸுக்கு அளித்த பேட்­டி­யில் கூறினார். வியட்னா­மில் இறா­லின் எடையை அதி­க­ரிப்­ப­தற்கு ஜெலட்­டின் எனப்­படும் ஒரு வகை இர­சா­ய­னப் பொருள் செலுத்­தப்­படு­வ­தாக அண்மை­யில் செய்­தித் ­தா­ளில் படித்­தது அவ­ருக்கு நினை­வுக்கு வந்தது.

சீனா­வில் இருந்து குடி­பெ­யர்ந்­துள்ள நிரந்த­ர­வா­சி­யான அவர், "சீனா­வில் இது­போன்று இறால், சோத்­தோங் ஆகி­ய­வற்­றில் எடை அதி­க­ரிப்­ப­தற்­காக சில தில்லு முல்லு வேலை­கள் நடக்­கும். அதே போன்ற கண்­ணா­டிக் குமிழ்­களைத்­தான் இந்த இறால்­களில் நான் இப்­போது கண்­டேன்," என்றார். மலே­சியா, இந்­தோ­னீ­சியா, வியட்­னாம் ஆகிய நாடு­களில் இருந்து சிங்கப்­பூ­ருக்கு இறால் இறக்­கு­ம­தி­யா­கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!