80 வயதில் திரும்பக் கிடைத்த உறவுகள்

வில்சன் சைலஸ்

தொலைந்­­­து­­­போன உற­­­வு­­­களைத் தேடிக் கண்­­­டு­­­பி­­­டித்து மறக்க முடியாத பிறந்த­­­நாள் பரிசைத் தாய்க்­­­குக் கொடுத்­­­துள்­­­ள­­­னர் சகோ­­­த­­­ரி­­­கள் மூவர். பல இன மக்கள் வாழும் சிங்கப்­­­பூ­­­ரில் இவர்­­­களுக்கு இரு இனங்களில் இப்போது உற­­­வி­­­னர்­­­கள் உண்டு. திருமதி தன­­­பாக்­­­கி­­­யம் ரெங்க­­­ சா­­­மிக்கு வயது 80. ஜூன் 17ஆம் தேதி பிறந்த இவ­­­ருக்­­­காக கடந்த மாதம் 26ஆம் தேதி சிங்கப்­­­பூர் இந்­­­தி­­­யர் சங்கத்­­­தில் திருமதி தன­­­பாக்­­­கி­­­யத்­­­தின் பிள்ளை­­­கள் அனை­­­ வ­­­ரும் கொண்டாட்­­­டம் ஒன்­­­றுக்கு ஏற்பாடு செய்­­­தி­­­ருந்த­­­னர்.

பிள்ளை­­­கள், பேரப்­­­பிள்ளை­­­கள், நண்­­­பர்­­­கள் என அனை­­­வ­­­ரின் முன்­­­னிலை­­­யில் கோலா­­­க­­­ல­­­மாக நடை­­­பெற்ற திருமதி தன­­­பாக்­­­கி­­­யத்­­­தின் 80வது பிறந்த­­­நாள் கொண்டாட்­­­டத்­­­தில் சுமார் 50 ஆண்­­­டு­­­க­­­ளாகத் தொடர்பின்றி இருந்த சீன உற­­­வி­­­னர்­­­கள் மீண்டும் கூடி இன்ப அதிர்ச்சி அளித்­­­த­­­னர். சீன­­­ரா­­­கப் பிறந்­­­து இந்­­­தி­­­ய­­­ராக வளர்ந்த­­­வர் புடவை கட்டி தெளிவாகத் தமிழ் பேசினா­­­லும் பார்ப்­­­ப­­­வர்­­­கள் இவரைச் சீனர் என்றே நினைப்­­­பர். காரணம், திருமதி தன­­­பாக்­­­கி­­­யத்தை ஈன்ற­­­வர்­­­கள் 1930களில் பிழைப்­­­புக்­­­காக சீனா­­­வி­­­லி­­­ருந்து சிங்கப்­­­பூர் வந்த­­­வர்­­­கள்.

உடல்­­­ந­­­லம் சரி­­­யில்­­­லாத கார­­­ணத்­­­தால் தங்களுக்­­­குப் பிறந்த முதல் குழந்தையை திருமதி தன­­­பாக்­­­கி­­­யத்­­­தின் சீனப் பெற்றோர் அதே சாங்கி கம்பத்­­­தில் வசித்த இந்­­­தி­­­யர்­­­களுக்­­­கு தத்­­­துக்­­­கொ­­­டுத்­­­த­­­னர் என விவ­­­ரித்­­­தார் திருமதி தன­­­பாக்­­­கி­­­யத்­­­தின் மூத்த மகளான 50 வயது திருமதி விஜ­­­ய­­­லட்­­­சுமி (படத்­தில் கறுப்பு நிறச் சேலை, ஆரெஞ்சு நிறச் சட்டை அணிந்து பின் வரிசை­யில் அமர்ந்­தி­ருப் ­ப­வர்). "என் தாயைத் தத்­­­தெ­­­டுத்­­த பெற்­­­றோ­­­ருக்கு அப்போது குழந்தை­­­கள் இல்லை. சீனக் குழந்தை­­­யாக இருப்­­­பி­­­னும் தமி­­­ழர்­­­களின் பண்­­­பாட்­­­டி­­­லும் கலா­­­சா­­­ரத்­­­ தி­­­லும் என் தாத்தா, பாட்டி என் தாயை வளர்த்தனர்," என்றார் அவர்.

பதின்ம வய­­­தி­­­லேயே திரு­­­ ம­­­ணம் செய்த திருமதி தன­­­பாக்­­­கி­­­யம், மூன்று பிள்ளை­­­கள் பிறந்த பிறகே தம்மை வளர்த்த பெற்றோர், தம்மைப் பெற்­­­ற­­­வர்­­­களைத் தமக்கு அடை­­­யா­­­ளம் காட்­­­டி­­­ய­­­தா­­­க­­­வும் நடந்த­­­வற்றைத் தமக்கு விவ­­­ரித்­­­த­­­தா­­­க­­­வும் சொன்னார். அப்போது பொதுப் பய­­­னீட்­­­டுத் துறையில் வேலை செய்­­­து­­­கொண்­­­டி­­­ருந்த கண­­­வ­­­ரு­­­டன் ஜாலான் புசாரின் கிங் ஜோர்ஜஸ் அவென்­­­யூ­­­வில் வசித்த வந்த திருமதி தன­­­பாக்­­­கி­­­யத்தை அடிக்­­­கடி அவரது சீனப் பெற்றோர் வந்து சந்­­­தித்­துச் செல்வர் என்றும் திருமதி தன­­­பாக்­­­கி­­­யம் கூறினார்.

எனினும், சிறு வயதில் தம்மீது அள­­­வு­­­க­­­டந்த பாசத்தைப் பொழிந்த தமது இந்­­­தி­­­யப் பெற்­­­றோ­­­ரின் மீது அதிக நாட்டம் செலுத்­­­திய இவர், சிலி­­­கிக்­­­குக் குடிப்­­­பெ­­­யர்ந்த­­­போது சீனக் குடும்பத்­­­தா­­­ரு­­­டன் இருந்த உறவைத் தொட­­­ர­­­வில்லை.

திருமதி தனபாக்கியத்தின் ஆறு பிள்ளைகள், பத்து பேரப் பிள்ளைகள், எட்டு கொள்ளுப்பேரப் பிள்ளைகளுடன் இப்போது சீன உடன் பிறப்புகளின் குடும்பமும் இணைந்துள்ளது. தற்போது தமது இளைய மகன் வீட்டில் வசித்துவரும் அவரை அவரது சீனத் தம்பியும் தங்கையும் தங்கள் குடும்பத்தினருடன் அடிக்கடி சென்று சந்தித்து மகிழ்கின்றனர். 80வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உறவுகளுடன் தனபாக்கியம் (நடுவில் பச்சை நிறச் சேலையில்). படங்கள்: வான் பாவ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!