தீவைச் சுற்றியுள்ள பசுமைப் பாதைப் பணி தொடக்கம்

தீவைச் சுற்றிச் செல்லும் 150 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட தொடர் பசுமைப் பாதை திட்டத்தின் முதல் 60 கிலோ மீட்டருக்கான கட்டுமானப் பணி இவ்வாண்டு இறுதியில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சைக்கிளோட்ட ஆர்வலர்க ளுக்கும் பூங்கா நடையர்களுக்கும் புதிய பொழுதுபோக்கு வசதிகளை உருவாக்கி, இணைப்பை மேம்படுத் தும் அரசாங்கத்தின் திட்டம் இது. செங்காங் ரிவர்சைட் பூங்கா வில் நேற்றுக் காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் லீ சியன் லூங் ஒரு மரக்கன்றை நட்டு, 2011ல் ஏற்றுக் கொள்ளப்பட்ட இத் திட்டத்தின் பணிகளைத் தொடங்கி வைத்தார். சிங்கப்பூர் தீவின் நீளத்தில் மூன்று மடங்கான இந்த 150 கிலோ மீட்டர் பசுமைப் பாதை மூன்று பகுதிகளாகக் கட்டப்படும்.

இத்திட்டத்தின் நிறைவு தேதி அறிவிக்கப்படாத நிலையில், இத்திட்டம் நிறைவு பெறும்போது இப்பாதையில் இயற்கை, கலாசார, வரலாற்று, பொழுதுபோக்கு ஆகிய வற்றைக் குறிக்கும் தளங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இப்பாதை நெடுகில் வசிக்கும் சுமார் 3.5 மில்லியன் குடியிருப் பாளர்களுக்குப் பயனளிக்கும் இத் திட்டம், 300 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பெரிய பூங்கா இணைப் புத் திட்டத்தின் ஒரு பகுதியாக அமையும். அடுத்த சில மாதங்களில் தேசிய பூங்காக் கழகம் பசுமைப் பாதை கட்டுமானப் பணிகளுக்கான ஏலக் குத்தகையில் பங்கேற்க நிறு வனங்களுக்கு அழைப்பு விடுக் கும்.

செங்காங் ரிவர்சைட் பூங்காவில் நேற்றுக் காலை 60 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட தொடர் பசுமைப் பாதை திட்டத்தின் கட்டு மானப் பணிகளைத் தொடங்கி வைத்த பிறகு, அங்மோ கியோவை சைக்கிளோட்ட, நடக்கும் நகரமாக மாற்றும் முதற்கட்ட பணி களின் நிறைவைக் குறிக்கும் விதத்தில் சைக்கிளோட்டினார் பிரதமர் லீ சியன் லூங் (நடுவில்). படம்: பெரித்தா ஹரியான்2016-07-10 06:00:00 +0800

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!