தண்ணீர் வாரம் 2016ல் வாழ்க்கைத் தொழில்சந்தை

தேசிய தண்ணீர் அமைப்­பான பொதுப் பய­னீட்­டுக் கழ­க­மும் என்­டி­யு­சி­ இளையர் அணியும் இணைந்து சிங்கப்­பூர் அனைத்­து­லக தண்ணீர் வாரத்­தில், அந்தத் துறையில் பணி­யாற்ற புதிய முகங்களைத் தேடி தண்ணீர் வாழ்க்கைத்­தொ­ழில் வேலைச் சந்தை ஒன்றை நடத்­த­வுள்­ளன. சிறிய, நடுத்­தர பன்னாட்டு நிறு­வ­னங்கள் என 18 நிறுவனங்கள் இந்த வேலைச் சந்தையில் 90 காலி­யி­டங்களை நிரப்ப எண்ணம் கொண்­ டுள்­ளன. தொழில்நுட்ப நிபுணர், கட்டட கட்­டு­மா­னம், இயந்­தி­ர­வி­யல் ஆகிய துறை­களில் பொறி­யி­ய­லா­ளர், வர்த்­தக உதவி­யா­ளர், தளவாட ஒருங்­கிணைப்­பா­ளர், அலு­வ­லக நிர்வாகி போன்ற பணிகள் இந்தக் கண்­காட்­சி­யின் மூலம் நிரப்­பப்­ப­ட­லாம்.

இதுவரை 250க்கும் மேற்­பட்­டவர்கள் 'கேரி­யர்ஸ் @எஸ்ஐ­ட­பள்­யூ­ட­பள்யூ' எனும் இந்த வேலைச் சந்தையில் பங்­கேற்க பதிவு செய்­துள்­ள­னர். 2006ஆம் ஆண்­டி­லி­ருந்து சிங்கப்­பூ­ரில் வளர்ச்­சி­யடைந்து வரும் முக்கிய துறை­களில் ஒன்றா­கத் தண்ணீர் துறை இருந்து வரு­கிறது. தற்போது சிங்கப்­பூ­ரில் 180 தண்ணீர் நிறு­வ­னங்களும் 20க்கும் மேற்­பட்ட ஆய்வுக் கழ­கங்களும் அமைந்­துள்­ளன. இத்­துறை­யில் சுமார் 14,000 நிபு­ணர்­கள், மேலா­ளர்­கள், நிர்­வா­கிகள், தொழில்­நுட்­பர்­கள் ஆகியோர் பணி­பு­ரிந்து வரு ­கின்ற­னர். சிங்கப்பூரின் பொரு­ளி­ய­லில் $2 பில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான ஆண்டு மதிப்பை இத்துறை ஈட்­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!