வங்கிக் கொள்ளை சந்தேக நபர் இன்னமும் பேங்காக்கில்

சிங்கப்பூரில் ஒரு வங்கியில் கொள்ளை அடித்திருக்கிறார் என்று சந்தேகிக்கப்படும் டேவிட் ஜேம்ஸ் ரோச் என்ற ஆடவர் இன்னமும் பேங்காங்கில் குடி நுழைவுத்துறை தடுப்புக் காவலி லேயே இருந்து வருகிறார். அந்த ஆடவர் தாய்லாந்தில் இம்மாதம் 10ஆம் தேதி கைதா னார். அவர் சிங்கப்பூரில் ஹாலாண்ட் வில்லேஜில் இருக்கும் ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் வங்கிக் கிளையில் சுமார் $30,000 பணத்தைக் கொள்ளையடித்திருக் கிறார் என்று கூறப்படுகிறது.

கனடா நாட்டினரான டேவிட் ஜேம்ஸ் ரோச்சை சிங்கப்பூருக்கு அனுப்பிவைப்பதன் தொடர்பில் நீதிமன்ற உத்தரவிற்காக தாய் லாந்து போலிஸ் காத்திருக்கிறது என்று அந்த நாட்டின் குடிநுழைவு போலிஸ் துறைத் தலைவர் நாத தோர்ன் ரோசோந் தோன் தெரி வித்தார். இதன் தொடர்பிலான உத்தரவு இந்த மாதம் 20ஆம் தேதிக்குப் பிறகுதான் பிறப்பிக்கப் படும் என்று தெரிகிறது. ரோச்சுக்கு வயது 27. கனடா வின் கிழக்குப் புறத்தில் இருக்கும் தனது வீட்டிலிருந்து ஓராண்டிற்கு முன் புறப்பட்ட ரோச் உலகம் சுற்றி வருகிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!