தேர்ச்சித்திட்ட தில்லுமுல்லு பற்றி வாரியம் விசாரணை

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் தேர்ச்சித் திட்டம் தொடர்பில் தில்லுமுல்லு நடப்பதாகவும் அதில் ஒரு பயிற்சி நிறுவனம் சம்பந்தப்பட்டிருப்பதாக வும் சிங்கப்பூர் ஊழியர் அணி மேம்பாட்டு ஆணையம் பொதுமக்களை எச்சரித்து இருக்கிறது. அந்தப் பயிற்சி நிறுவனம் தன்னிடத்தில் பயிற்சிப் படிப்பில் சேர்ந்துக்கொள்ளும் நபர்களுக்கு பற்றுச்சீட்டுகளைத் தருவதாக அறிவித்திருக்கிறது. இப்படி செய்துவிட்டு பிறகு அந்த நிறுவனம் பயிற்சியில் சேருவோரின் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் தேர்ச்சித்திட்ட பணத்தை அவருடைய சிங்பாஸ் மூலம் பெற்றுக்கொள்கிறது என்று இந்த வாரியம் பொதுமக்களுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறது.

இந்த விவகாரம் பற்றி வாரியம் புலன்விசாரணை நடத்தி வரு கிறது. ஸ்கில்ஸ்ஃபியூச்சர் என் பது சிங்கப்பூரர்களின் தேர்ச்சி களை மேம்படுத்துவதற்கு அர சாங்கம் பண உதவி அளிக்கும் திட்டமாகும். ஸ்கில்ஸ்ஃபியூச்சர் தேர்ச்சித் திட்டம் இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கியது. அத்திட்டத்தின் கீழ் பல பயிற்சிப் படிப்புகளில் சேர்ந்து தங்களது தேர்ச்சிகளை மேம்படுத்திக்கொள்ள 25ம் அதற்கு அதிக வயதும் உள்ள சிங்கப்பூரர்கள் ஒவ்வொருவரும் அரசாங்கத்திடமிருந்து $500 தொகையைப் பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ் சிங்கப் பூரர்களுக்கு 12,000க்கும் அதிக பயிற்சிப் படிப்புகள் காத்திருக்கின்றன. இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 18,000க்கும் அதிகமானோர் அரசாங்க பண உதவியைப் பயன்படுத்திக் கொண்டுள்ளதாக தற்காலிக கல்வி அமைச்சர் வோங் யீ குங் கடந்த ஏப்ரலில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்த ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பண உதவித் திட்டத்தை யாராவது தவறாகப் பயன்படுத்தினால் அந்த விவகாரம் கடுமையான தாகக் கருதப்படும் என்று வாரியம் எச்சரித்திருக்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!