‘உலகமயமாதலின் பலன்கள்பற்றி மக்களுக்குப் புரிய வேண்டும்’

பிரான்ஸின் நீஸ் நகரில் மேற் கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல், துருக்கியில் தோல்வி அடைந்த ஆட்சிக் கவிழ்ப்பு, அமெரிக்காவில் போலிஸ் அதி காரிகள் சுடப்பட்டது போன்ற உலக நாடுகள் சிலவற்றில் நிகழ்ந் துள்ள அசம்பாவித சம்பவங்கள் நம்மைப் பதற வைத்துள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நம்பிக்கை தருவதாக ஏதும் உள்ளதா என்று பிரதமர் லீ சியன் லூங்கிடம் கேட்கப்பட்டது. நேற்று முன்தினம் நடந்த தெற் காசிய புலம்பெயர்ந்தோர் மாநாட் டின் இரவு விருந்து நிகழ்ச்சியில் பிரதமர் லீ ஒரு சிறப்புக் கலந்து ரையாடலில் பங்கேற்றார். சுமார் 1,000 பேர் முன்னிலையில் நடத்தப்பட்ட கலந்துரையாடலை வழிநடத்தியவர் இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செய லாளர் திரு ‌ஷியாம் சரண்.

உலகம் தற்போது பிரச்சினை களைச் சந்தித்துக் கொண்டிருக் கிறது என்று கூறிய திரு லீ, அதே வேளையில் பொது அமை திக்கும் வளப்பத்துக்கும் காலம் உண்டு என்பதை நாம் மறக்கக் கூடாது என்றார். "உலகமயமாதல் குறிப்பிடத் தக்க பலன்களை தெற்காசியா, சீனா, இதர நாடுகள் ஆகியவற் றுக்கு அளித்துள்ளது. ஆகவே, அனைத்து நாடுகளும் உலகமயமா தலை நோக்கி முன்னேற வேண் டும். இருப்பினும், உலகமய மாதலால் கிடைக்கும் பலன்களை அதனை அனுபவிக்க முடியாத நாடுகள் பலவற்றுக்குக் கிடைக்கு மாறு செய்ய வேண்டும்," என்று திரு லீ வலியுறுத்தினார்.

1990களில் இந்தியா தனது கதவுகளை அனைத்துலக வர்த்த கத்துக்குத் திறந்துவிட்டது. அது முதல் இந்தியா வளர்ச்சிப் பாதை யில் சென்று கொண்டிருக்கிறது என்பதைச் சுட்டிய பிரதமர், அதன் புலம்பெயர்ந்தோர் உலகம் முழுவதி லும் கட்டமைப்பையும் ஆதிக்கத் தையும் வழங்கி வந்துள்ளனர் என்றார். "தெற்காசியாவுடனான உறவு மூலம் சிங்கப்பூரும் பல நன்மை களை அடைந்துள்ளது," என்று கூறிய திரு லீ, "இந்தியாவும் இந்த வட்டாரத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கலாம்," என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!