உச்ச நேரத்திலும் ரயில், பேருந்தில் மடக்கு சைக்கிளுக்கு அனுமதி

மடக்­கிக் கைகளில் எடுத்­துச் செல்­லக்­கூ­டிய விதத்­தி­லான 'ஃபோல்­ட­பிள்' சைக்­கிள்­களை நாள் முழு­வ­தும் ரயில்­கள், பேருந்­து­களில் பய­ணி­கள் எடுத்­துச் செல்­வதற்கு அனு­ம­திக்­கும் திட்டம் சோதனை முறையில் ஆறு மாதங்களுக்­குச் செயல்­படுத்­தப்­ப­ட­உள்­ளது. சைக்­கிள்­களைப் பய­ணங்களுக்­குப் பயன்­படுத்­து­வதை ஊக்­கு­விக்­கும் முக்­கி­ய­மான படியாக இது அமையும் என கவ­னிப்­பா­ளர்­கள் கரு­து­கின்ற­னர். மீடி­யா­கார்ப் வளா­கத்­தில் நடை­பெற்ற 'வாக் சைக்கிள் ரைட் எஸ்ஜி' எனும் கருத்­த­ரங்­கில் நேற்று போக்­கு­வ­ரத்து அமைச்­சர் கோ பூன் வான் இது குறித்து அறி­வித்­தார்.

தற்போது உச்ச நேரங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் மட்டுமே அத்­தகைய சைக்­கிள்­களை பொதுப் போக்­கு­வ­ரத்­தில் கொண்டு செல்ல பய­ணி­கள் அனு­ம­திக்­கப்­படு­கின்ற­னர். "இந்த முன்­னோ­டித் திட்டம் வெற்­றி­பெற, பொதுப்­ போக்­கு­வ­ரத்­தில் மடக்­கக்­கூ­டிய சைக்­கிள்­ களைக் கொண்டு செல்வோர் பேருந்து, ரயில்­களில் பிற­ரி­டம் பரி­வு­டன் நடந்­து­கொள்ள வேண் டும்," என்றார் திரு கோ. அடுத்த ஆண்டு ஜூரோங் லேக் வட்­டா­ரத்­தில் அறி­மு­கம் காண­வுள்ள 'சைக்­கிள் பகிர்வு' முறை குறித்த தக­வல்­களை­யும் அவர் வெளி­யிட்­டார். இந்தத் திட்­டத்­தின்­கீழ், 100 சைக்கிள் நிறுத்­தும் இடங்களில் மொத்தம் 1000 சைக்­கிள்­கள் நிறுத்­தப்­படும். அவற்றை 24 மணி நேரமும் பயன்­படுத்த இயலும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!