சாலையில் ‘கருஞ்சட்டை காவலர்கள்’; தவறுசெய்வோர் மீது கண்

சிங்கப்பூரில் சாலைகளில் குற்றம் புரிகின்ற, குறிப்பாக தவறுசெய்யும் மோட்டார்சைக்கிள் ஓட்டிகளை மடக்கும் முயற்சிகளில் ஆகப்புதிய ஒன்றாக சென்ற மாதம் முதல் கருப்பு உடை போக்குவரத்துப் போலிசார் கருப்பு மோட்டார்சைக் கிள்களில் வலம் வருகிறார்கள். போக்குவரத்து அதிகமாக இருக்கும்போது சாலைகளில் தவுறுசெய்யும் மோட்டார்சைக்கிள் ஓட்டிகளை அதிகாரிகள் காரில் சென்று மடக்குவது சிரமமானது. மோட்டார்சைக்கிள்காரர்கள் வேகமாகச் சென்று பார்வையில் இருந்து மறைந்துவிடுவார்கள். ஆனால் இப்போது அதிகாரிகள் பயன்படுத்தும் 900 சிசி மோட்டார் சைக்கிள்களிடம் ஜம்பம் பலிக் காது. "நாங்கள் வாகனங்களுக்கு ஏற்ற வாகனங்களைச் சாலையில் இறக்குகிறோம்," என்று போக்கு வரத்துப் போலிஸ் தளபதியான மூத்த உதவி ஆணையர் சாம் டீ விளக்கினார். சாலைகளில் மோட் டார்சைக்கிள்களே போக்குவரத்து அதிகாரிகளுக்கு அதிக கவலை தருவதாக இருக்கின்றன.

சாலைகளில் மோட்டார்சைக் கிள்களில் மூர்க்கமாகச் செல் வதில் உள்ள ஆபத்துகள் பற்றி சென்ற ஆண்டில் சமூக நிகழ்ச் சிகள், ஊடக இயக்கங்கள் வழி யாக மக்களுக்குப் போலிஸ் போதித்தது. சிங்கப்பூரில் கடந்த 2014ல் 4,875 மோட்டார்சைக்கிளோட்டி களும் பின்னிருக்கைப் பயணி களும் சாலை விபத்துகளில் காயம் அடைந்து இருக்கிறார்கள் என்பது போக்குவரத்துப் போலிஸ் புள்ளிவிவரங்கள் மூலம் தெரி கிறது. சென்ற ஆண்டில் சாலை களில் நிகழ்ந்த மரணங்களில் பாதி= அதாவது 72 மரணங்கள்= மோட்டார்சைக்கிள் தொடர் பானவை. புதிய 'கருப்பு' அதிகாரிகள் முதல் மாதத்தில் சாலை விதிகளை மீறிய 700க்கும் அதிக சம்வங் களைக் கண்டுள்ளதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!