வெற்றி என்பது பெறுவதில் அல்ல, கொடுப்பதில்தான்

வயதாக வயதாக வெற்றி என்பதற்குப் பொருள் மாறுகிறது என்றும் வெற்றி என்பது நாம் எவ்வளவு பெறுகிறோம் என்பதில் இல்லை என்றும் அது மற்றவருக்கு நாம் எவ்வளவு கொடுக்க முடியும் என்பதில்தான் இருக்கிறது என் றும் தற்காலிக கல்வி அமைச்சர் (உயர்கல்வி, தேர்ச்சிகள்) ஓங் யி காங் மாணவருக்கு ஆலோசனை கூறி இருக்கிறார். கைத்தொழிலை முழுமையாகக் கற்றுக்கொண்டு பொருள்பொதிந்த வகையில் வேறுபட்டு திகழுங்கள் என்று தொழிற்கல்வி மாணவர் களிடம் அவர் தெரிவித்தார். தொழில்நுட்பக் கல்விக் கழகத் தின் பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், வெற்றி என்பது வயதுக்கு ஏற்ப பொருள் மாறுபடக் கூடிய ஒன்று என்று தெரிவித்தார்.

வெற்றி என்பதற்கு சிரமமான, ஆனால் உண்மையான பொரு ளைத் தேர்ந்து எடுத்துக்கொள்ளும் படி அவர் மாணவர்களுக்கு ஆலோசனை கூறினார். இப்படிச் செய்து இந்த உலகில் பொருள் பொதிந்த முறையில் வேறுபட்டு திகழும்படி அவர் கேட்டுக்கொண் டார். இதற்குச் சொந்த கைத் தொழிலில் முழுமையான நிலையை அடைய வேண்டியது அவசியம் என்றார் அமைச்சர். இளையர்களைப் பொறுத்தவரை யில் வெற்றி என்பதற்கு நம்மில் பலரும் அடிக்கடி கூறும் பொருள் என்னவென்றால், படிப்பில் குறிப் பிட்ட மதிபெண்களை அவர்கள் எடுக்கவேண்டும். குறிப்பிட்ட பள்ளிக்கூடங்களில் சேர வேண்டும். பல்கலைக்கழகத்துக் குச் செல்லவேண்டும். குறிப்பிட்ட அளவு சம்பளம் பெறவேண்டும். பதவியைச் சொல்லிக்கொள்ளும் வேலை ஒன்றைப் பெறவேண்டும் என்பதே என்றார் திரு ஓங்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!