பட்டம் பெறுமுன்னே பத்தில் எழுவருக்கு வேலை

இவ்வாண்டுடன் கல்வி முடித்து பட்டம் பெற்று வெளியான நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழக (என்டியு) மாணவர்களில் பத்து பேரில் எழுவருக்கு வேலை கிடைத்துவிட்டது. கடந்த ஜூன் மாதம் ஐயாயிரத் திற்கும் மேற்பட்ட மாணவர்களி டம் பல்கலைக்கழகம் நடத்திய முதற்கட்ட ஆய்வின்மூலம் இது தெரிய வந்துள்ளது. வேலை கிடைத்த மாணவர் களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை ஒத்துள்ளது என்றும் இது அதற்கு முந்தைய ஆண்டை விட அதிகம் என்றும் தெரிவிக்கப் பட்டது. 2014ஆம் ஆண்டில் அங்கு படித்து முடித்து வெளி யேறிய மாணவர்களில் மூன்றில் இருவருக்கு வேலை கிடைத்து இருந்தது.

அந்தக் கல்வி நிறுவனத்தில் இருந்து இவ்வாண்டு பொறியியல் பட்டம் பெற்று வெளியானோரில் ஒருவர் திரு ஏ.சரவணன். அவரைத் தங்களது நிறுவனத் தில் வேலைக்குச் சேரும்படி ஐந்து நிறுவனங்கள் அழைத்திருந்தன. இப்போது அவர் அக்சென்ச்சர் நிறுவனத்தில் மென்பொருள் பகுப் பாய்வாளராகப் பணியாற்றுகிறார். "பரந்த நோக்கிலான கல்வியை என்டியு எனக்கு வழங்கியது. இது, சிறந்த புரிதலுடன் திட்டப் பணிகளை அணுகும் திறன்மிக்க வனாக என்னை மாற்றியது. அமெரிக்க விமானப் படை பயில கத்தில் உள்ளகப் பயிற்சி பெற் றது இன்னொரு மதிப்புமிக்க அனுபவம். அங்கு அமெரிக்கா, பிரான்ஸ், கனடா நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து நிரலாக்கப் பணிகளில் ஈடுபட்டேன்," என்றார் அவர்.

சிங்கப்பூரின் மண்பாண்டக் கலை நிபுணரும் கலாசார விருது வென்றவருமான திரு இஸ்கந்தர் ஜலிலுக்கு (இடது) கௌரவ முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தார் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் வீ சோ யா. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தற்காலிக கல்வி அமைச்சர் ஓங் யி காங் (வலது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!