ஆய்வு, புத்தாக்க வளர்ச்சிக்கு வலுவான பங்காளித்துவம் தேவை

ஆய்வு மற்றும் புத்தாக்கத் துறையை அடுத்த கட்ட வளர்ச் சிக்குக் கொண்டு செல்ல வேண்டு மானால் பொதுத் துறைக்கும் தனியார் துறைக்கும் இடையே வலுவான பங்காளித்துவம் ஏற் படுத்தப்பட வேண்டும் என்று தற் காலிகப் பிரதமர் டியோ சீ ஹியன் தெரிவித்துள்ளார். இப்படிப்பட்ட பங்காளித்துவம், ஆய்வாளர்களுடன் தொழில்துறை யினர் நெருங்கிப் பணியாற்ற வழி வகுக்கும். அப்போது புதிய யோச னைகள் உருவாகும், உலகத்துக்கு உண்மையான தேவைகள் என்ன என்பது அடையாளம் காணப்படும், அந்தத் தேவைகளுக்கான தீர்வு கள் கண்டறியப்படும் என்றும் திரு டியோ குறிப்பிட்டார். தேசிய பாதுகாப்பு ஒருங்கி ணைப்பு அமைச்சருமான திரு டியோ, நேற்று 'ஃபியுஷனோ பொலிஸ்' வளாகத்தில் நடைபெற்ற முதலாவது அறிவியல் தலைவர்கள் கருத்தரங்கில் உரையாற்றினார்.

சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சிக்கு ஆய்வு, புத்தாக்கம், நிறுவனம் ஆகியவை முக்கியமான அம்சங்கள் என்று கூறிய துணைப் பிரதமர், 1991ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர், ஆய்வு, புத்தாக்கத் துறைகளில் ஆற்றல்களை மேம்ப டுத்தும் முயற்சிகளில் கவனம் செலுத்தி வருகிறது என்றார்.

அவை, விமானத்துறை, மருந் தியல் துறை போன்றவற்றின் வளர்ச்சியை ஆறு மடங்காக்கி, உயர் தொழில்நுட்ப ஏற்றுமதிகள் கடந்த ஆண்டில் $180 பில்லியனை எட்டும் அளவுக்குப் பன்மடங்கு அதிகரித்துள்ளது. "அறிவியல் மேம்பாடுகள் தொழில்நுட்பவியல் திருப்புமுனை கள், புதிய சந்தைகளுக்கான புதிய வர்த்தக மாதிரிகளை மேம்ப டுத்தி வாய்ப்புகளைப் பெறுதல் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு ஆய்வு, புத்தாக்கம், நிறுவனத் துறைகள் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும்," என்றும் துணைப் பிரதமர் டியோ வலியுறுத் தினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!