இந்தோனீசிய முன்னாள் ஜெனரல் விசாரிக்கப்பட்டது பற்றி ஆணையம் விளக்கம்

சிங்கப்பூர் சாங்கி விமான நிலை யத்தில் புதன்கிழமை இந்தோ னீசியாவின் ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் சூர்யோ பிரபோவோவை பரிசோதனை நடைமுறையின் ஒரு பகுதியாக சோதனைச் சாவடி அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரித்தனர் என்று சிங்கப்பூரின் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் விளக்கம் அளித்து உள்ளது. இடைவழிப் பயணமாக தான் சிங்கப்பூர் சாங்கி விமான நிலை யம் வந்தபோது தன்னைத் தடுத்து நிறுத்தி அதிகாரிகள் விசாரித்த தாக திரு சூர்யோ சமூக ஊட கத்தில் புகார் தெரிவித்திருந்தார். தான் கருப்புப் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாகவும் இதற்கான காரணங்கள் தெளிவாகத் தெரிய வில்லை என்றும் அந்த முன்னாள் ஜெனரல் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

"இந்தோனீசிய மக்களுடன் சிங்கப்பூர் தோழமையாக இல்லாத பட்சத்தில் பயங்கரவாத ஒழிப்பிலும் இதர இருதரப்பு ஒத்துழைப்பிலும் சிங்கப்பூருடன் ஒத்துழைக்கும் கொள்கையை இந்தோனீசிய அர சாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை இருக்கிறது," என்றும் அதே ஃபேஸ்புக் பக்கத் தில் திரு சூர்யோ குறிப்பிட் டிருந்தார். ஃபிஜி தீவு செல்லும் வழியில் சாங்கி விமான நிலையம் வந்த திரு சூர்யோவுக்கு சிங்கப்பூருக் குள் நுழைய அனுமதி மறுக்கப்பட் டது என்று அந்தாரா செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரி வித்தது. இதன் தொடர்பில் அறிக்கை ஒன்றின் மூலம் ஆணை யம் நேற்று விளக்கம் அளித்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!