மானபங்கம், வன்முறை: ஆடவருக்கு 14 மாதச் சிறை

தனது வீட்டு பணிப்­பெண்ணை மான­பங்கப்படுத்­திய குற்­றத்­திற்காகவும் மனைவியை குத்­தி­ய­தற் காகவும் டான் செங் சுவான் என்ற ஆட­வ­ருக்கு 14 மாதச் சிறை தண்டனை விதிக்­கப்­பட்­டது. பாதிக்கப்பட்ட 29 வயது இந்­தோ­னி­சியப் பணிப்­பெண் இரண்டு ஆண்­டு­களுக்கு முன் டானின் வீட்டில் வேலைக்குச் சேர்ந்தார். டான் அந்த பணிப்­பெண்ணைப் பலமுறை வீட்டில் மான­பங்கம் செய்ய முற்­பட்­டார். அவரின் நட­வ­டிக்கை­

களைப் பணிப்­பெண் தனது கைபேசியின் வழி படம் பிடித்து டானின் மனை­வி­யி­ட­மும் மக­னி­ட­மும் காட்­டினார். டானின் மகன் தந்தையின் செயலைக் கண்­டித் ­தார். மறுநாள் டான் சக்கர நாற்­கா­லியைப் பயன்படுத்தும் தமது 57 வயது மனை­வி­யி­டம் வாக்கு வாதத்­தில் ஈடு­பட்டார். அப்­போது அவரை தலை­யி­லும் தோள்­பட்டை­யி­லும் டான் குத்­தினார். இந்த மாதத் தொடக்­கத்­தில் டான் தன்மீது சுமத்­தப்­பட்ட மூன்று குற்­றங்களை­யும் ஒப்புக் கொண்டார். அவ­ருக்கு 14 மாதச் சிறைத் தண்டனை விதிக்­கப்­பட்­டது. அவரது தண்டனை அடுத்த மாதம் 7ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!