கிராப், டிரான்ஸ் கேப் புதிய ஒப்பந்தம்

அனைத்து 'டிரான்ஸ் கேப்' டாக்சி ஓட்டுநர்களையும் 'கிராப்' தளத்துக்குள் ஒன்றிணைக்கும் பங்காளித்துவம் ஒன்றில் அவ்விரு நிறுவனங்களும் புதிய ஒப்பந்தம் ஒன்றை அறிவித்துள்ளன. இந்த ஒப்பந்தத்தின் வழியாக, சுமார் 7,000 'டிரான்ஸ்=கேப்' ஓட்டுநர்கள் 'கிராப்' கைபேசிச் செயலியைப் பயன்படுத்தி பயணிகளின் தேவைக்கேற்ப டாக்சி சேவைகள் புரிவர்.

'கிராப்' நிறுவனத்தின் பயணிகள், தொழில்நுட்பம் ஆகியவற்றை 'டிரான்ஸ்=கேப்' ஓட்டுநர்கள் பெறுவதுடன் 'கிராப்' நிறுவனம் அதிக எண்ணிக்கையிலான ஓட்டுநர்களைப் பெறுவதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும். 'டிரான்ஸ்- கேப்' நிறுவனத்தின் புதிய ஓட்டுநர்களுக்கு 'கிராப்' செயலி தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்படும். ஜூரோங் ஈஸ்டில் சென்ற ஜூலை மாதத்தில் தனது முதல் 'ஓட்டுநர் ஆதரவு நிலையத்தை' அமைத்த 'கிராப்', அதன் இரண்டாவது நிலையத்தை இம்மாதம் பிடோக்கில் திறக்கவுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!