புதிய நிறுவனங்களுக்கு உதவ ‘ஐடிஏ’ திட்டம்

வெளி­நா­டு­களில் பெரிய அள­வி­லான அடித்­தளக் கட்­டமைப்பு, நகர சீரமைப்­புத் திட்­டங்களை மேற்­கொள்வதில் வளர்ந்து வரும் தொழில்­நுட்ப நிறு­வ­னங்களுக்கு உதவும் வகையில் தகவல் தொடர்பு மேம்பாட்டு ஆணையம் பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. அதன் அடிப்­படை­யில் அடித்­தள கட்­டமைப்பு, சொத்து நிறு­ வ­னங்க­ளான சர்பானா ஜூரோங், லெண்ட்­லீஸ் ஆகி­ய­வற்­று­டன் இரண்டு புரிந்­து­ணர்வு ஒப்­பந்தங் களை ஆணையம் செய்துள்ளது. ஆணை­யத்­தின் அங்­கீ­கா­ரம் பெற்ற, புதி­தா­கத் தொடங்கப்­பட்ட உள்ளூர் தொழில்­நுட்ப நிறு­வ­னங்களுக்­கும் அடித்­தள கட்­டமைப்பு, சொத்து நிறு­வ­னங் களுக்­கும் இடையே கூட்டு முயற்­சி­களை மேற்­கொள்ள இந்த ஒப்­பந்தங்கள் வழிவகுக்­கும்.

போதிய அனு­ப­வம் இல்லாமை, சந்தை­யில் போதிய விளம்ப­ரம் இல்லாமை போன்ற கார­ணங்க­ளால் சுய­மா­கச் செயல்­படும்­போது, தங்கள் சேவைகளை விளம்ப­ரப்­படுத்த இந்தப் புதிய தொழில்­நுட்ப நிறு­வ­னங்கள் சிர­மங்களை எதிர்­கொள்­ள­லாம் என்று ஆணையம் தெரி­வித்­தது. துறை­களுக்­குள் ஆரோக்­கி­ய­மான போட்டியை உரு­வாக்கி, புதிய நிறு­வ­னங்களின் பொருட்­களை­யும் சேவை­களை­யும் சந்தைப்­படுத்­து­வதற்­கான வழி­முறை­களை அர­சாங்கம் ஆராய்ந்து வரு­வ­தாக தொடர்பு தகவல் அமைச்­சர் யாக்கூப் இப்­ரா­ஹிம் தெரி­வித்­தார். சிங்கப்­பூர் இயக்­கு­நர்­கள் கழ­கத்­தின் மாநாட்­டில் நேற்று பேசிய அமைச்­சர் யாக்கூப் இப்­ரா­ஹிம் இதனை அறி­வித்­தார். சர்பானா ஜூரோங், லெண்ட்­லீஸ் நிறு­வ­னங்களு­டனான பங்கா­ளித்­து­வத்­தின் மூலம் சிறிய நிறு­வ­னங்களுக்கு அதிக அறி­மு­கம் கிடைக்­கும். அதன்­மூ­லம் அவர்­கள் ஆசியா, ஆப்­ரிக்கா, மத்­தி­ய ­கிழக்கு பகுதிகளிலும் அதற்கு அப்­பா­லும் விரி­வடைய முடியும் என்றார் அமைச்­சர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!