தேசிய சேவையாற்றுவதற்கு முன்பே பிடித்தமான பிரிவைத் தேர்வு செய்யலாம்

தேசிய சேவையாற்றுவதற்கு முன்பே எந்தப் பிரிவில் சேர்ந்து சேவையாற்ற விரும்புகிறார்கள் என்பதை முழுநேர தேசிய சேவை யாளர்கள் தெரிவிக்கலாம். இந்த நடைமுறை வரும் நவம்பர் மாதத்திலிருந்து தொடங் குகிறது. சிங்கப்பூர் ஆயுதப் படைகள், சிங்கப்பூர் போலிஸ் படை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவற்றில் உள்ள 33 பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் இணைந்து சேவை யாற்ற தேசிய சேவையாளர்கள் விருப்பம் தெரிவிக்கலாம். அல்லது குறிப்பிட்ட ஒரு பிரிவைத் தேர்ந்தெடுக்க விருப்ப மில்லை என்றும் தெரிவிக்கலாம்.

இந்தப் புதிய திட்டத்தில் மின்னல் படையும் கடற்படையின் முக்குளிப்புப் பிரிவும் இடம் பெறவில்லை. தேசிய சேவையில் சேருவதற்கு முன்பே இந்தப் பிரிவுகளைத் தேர்ந்தெடுக்க முடியாது. இந்த இரண்டு பிரிவுகளிலும் சேர கடுமையான நிபந்தனைகள் உள்ளன. இப்பிரிவுகளுக்கான தேர்ந்தெடுப்பு முறை மற்ற பிரிவுகளைக் காட்டிலும் வித்தியாசமானது.

தகுந்த உடற்திறன், குறிப் பிட்ட பொறுப்புகளை ஏற்று நடத் தும் திறனைக் கொண்டிருப்பது, குறிப்பிட்ட பிரிவில் சேரு வதற்கான தகுதியைக் கொண் டிருப்பது ஆகிய தகுதிகளையும் கருத்தில் கொண்டு தேசிய சேவையாற்ற இருப்பவர்கள் தங்களுக்குப் பிடித்தமான பிரிவுகளைத் தேர்ந்தெடுக்கலாம் என்று தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் கடந்த ஜூலை மாதம் அறிவித்தார்.

தேசிய சேவையில் சேர இருப்பவர்கள் தங்களுக்கு விருப்பமான பிரிவைத் தேர்ந்தெடுக்க உதவும் வகையில் மத்திய மனிதவள முகாமின் இணையத்தளத்தில் தேவையான தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!