ஸிக்கா, டெங்கி தடுப்பு நடவடிக்கைகள் துரிதம்

ஸிக்கா நோய் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த நீ சூன் சவுத் வட்டார வாசிகள் ஒன்றிணைந் துள்ளனர். நீ சூன் சவுத் குடியிருப்பாளர்கள் நேற்று தங்கள் வட்டாரத்தில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யக் கூடிய இடங்களைச் சோதனை செய்து குப்பைகளையும் அகற்றினர். குடியிருப்பாளர் களுக்கு ஸிக்கா நோய் குறித்த தகவல்கள், அதன் அறிகுறிகள், நோய் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை பற்றி விளக்கப்பட்டன.

ஏடிஸ் வகைக் கொசுக்களால் பரவும் ஸிக்கா, டெங்கி ஆகிய இருவகை தொற்று நோய்களைத் தடுக்கக் கொசுக்கள் இனப் பெருக்கம் செய்யக்கூடிய இடங்களை ஒழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையை நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் லீ பீ வா வழிநடத்தினார். "குப்பைகள் சேர்ந்தால் அவற் றில் நீர் தேங்கும் அல்லது கால்வாய்களை அடைத்துவிடும். கொசுக்கள் இனப்பெருக்கம் செய் யக்கூடிய இடங்களை அதிகாரிகள் எவ்வளவு சிரமப்பட்டுச் சோதனை செய்தாலும் ஏடிஸ் கொசுக்கள் முட்டையிட்ட இரண்டே நாட்களில் குஞ்சு பொரித்துவிடும்.

"அதனால் பொது இடங்கள் குப்பைகள் இல்லாதவையாக இருப்பதே நமது சிறந்த தற்காப்பு," என்றார் அவர். கொசுக்கள் பரவாமல் இருக்க மேற்கொள்ளவேண்டிய செயல் முறைகள் கொண்ட கையேடுகளும் குடியிருப்பாளர்களுக்கு விநி யோகம் செய்யப்பட்டன. இதற்கிடையே சிங்கப்பூரின் இல்லப் பணிப்பெண்கள் நிலைய மும் ஸிக்கா தொற்றுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கையை நேற்று மேற்கொண்டது.

தோ பாயோ பூங்காவில் நேற்று காலை கூடிய வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களுக்கு ஸிக்கா தொற்று குறித்த கையேடுகள் விநியோகம் செய்யப்பட்டன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!