வேலையின்மை கூடி, வாய்ப்புகள் குறைந்தன

பொரு­ளி­யல் வளர்ச்சி மெது­வடைந்­தி­ருப்­ப­தன் எதி­ரொ­லி­யாக இரண்டாம் காலாண்­டில் வேலை­யின்மை விகிதம் உயர்ந்­துள்­ளது; வேலை­வாய்ப்­புகளும் குறைந்­து­ வ­ரு­கின்றன. பரு­வங்களில் காணப்படும் மாற்­றங்களுக்கு ஏற்ப சரிசெய்யப் பட்ட பிறகு, கடந்த ஜூன் மாதத்­தில் வேலை­யின்மை விகிதம் 2.1 விழுக்­கா­டாக உயர்ந்தது. மார்ச் மாதத்­தில் அது 1.9 விழுக்­ கா­டாக இருந்த­தாக மனி­த­வள அமைச்சு குறிப்பிட்டது. சிங்கப்­பூ­ரர்­களிடையே மார்ச் மாதத்­தில் 2.6 விழுக்­கா­டாக இருந்த வேலை­யின்மை விகிதம் ஜூன் மாதத்­தில் 3.1 விழுக்­ கா­டாக உயர்ந்தது. அதே காலகட் ­டத்­தில் நிரந்த­ர­வா­சி­களிடையே இந்த விகிதம் 2.7லிருந்து 3 விழுக்­கா­டாக உயர்ந்தது. பலர் குறைந்த­பட்­சம் 25 வாரங்கள் வரை வேலை இல்­லாமல் இருந்த­னர். நீண்ட­கால வேலை­யின்மை விகிதம் சிங்கப்­பூ­ரர், நிரந்த­ர­வா­சி­களிடையே 0.8 விழுக்­கா­டாக இருந்தது. 2010ஆம் ஆண்­டுக்­குப் பிறகு இதுவே ஆக அதி­க­மான நீண்ட­கால வேலை­யின்மை விகி­த­ மா­கும். சென்ற ஆண்­டி­லி­ருந்து குறைந்­து­வ­ரும் வேலைவாய்ப்பு, உச்ச பரு­வங்களில் காணப்படும் வேறு­பாடுகளுக்­கு ஏற்ப சரிசெய்யப்பட்ட பிறகு ஜூன் மாதத்­தில் 49,400ஐத் தொட்டது. இருப்­பி­னும் கடந்த 4 ஆண்­டு­களில் வேலை தேடு­ப­வர்­களை­ விட வேலை­வாய்ப்பு குறைவாக இருப்­பது இதுவே முதல்­முறை. இவ்­வாண்­டின் முதல் பாதியில் 9,510 பேர் வேலை இழந்த­னர். 2009ஆம் ஆண்­டுக்­குப் பிறகு ஆக அதிக அள­வா­கும் இது. முதல் காலாண்­டில் வேலை இழந்­தோ­ரில் 45 விழுக்­காட்­டி­னர் ஜூன் மாதத்­துக்­குள் மீண்டும் பணியில் அமர்ந்த­னர். இரண்டாம் காலாண்­டில் மொத்த வேலை­வாய்ப்பு வளர்ச்சி மெது­வடைந்து 4,200ஐத் தொட் டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!