சோதனைச் சாவடியில் 7,000 பெட்டி கள்ளச் சிகரெட்டுகள் சிக்கின

சிங்கப்பூருக்குள் 7,000 பெட்டி சிகரெட்டுகளைக் கள்ளத்தன மாகக் கொண்டு வர முயன்ற 41 வயது மலேசிய லாரி ஓட்டு நர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் காலை 5.20 மணிக்கு உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத் திய சோதனையில், அந்த லாரியில் இருந்த 3.7 டன் எடை கொண்ட ‘தெர்மராக்’ எனும் கட்டடப் பணியில் பயன்படுத்தப்படும் பொருளுக்கிடையில் 7,149 பெட்டி கள்ள சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் உத்தேச வரி மதிப்பு $576,960 என்றும் தெரிவிக்கப்பட்டது.

Loading...
Load next