சிங்கப்பூரின்ஆகஸ்ட் மாத ஏற்றுமதிகள் ஏற்றமின்றி இருந்தன

சிங்கப்பூரின் ஆகஸ்ட் மாதத்தின் ஏற்றுமதிகள் ஜூலை மாதத்தின் விகிதத்திலிருந்து எவ்வித ஏற்றமுமின்றி அதே நிலையில் இருந்தன என்று ‘ஐஇ சிங்கப்பூர்’ அமைப்பு நேற்று தெரிவித்தது. சிங்கப்பூரின் மிகப் பெரிய 10 எண்ணெய் சாரா ஏற்றுமதிச் சந்தைகளில் ஆறில் ஏற்றுமதிகள் உயர்ந்தன. அவற்றுள் தைவான், ஹாங்காங், அமெரிக்கா போன்றவை ஏற்றுமதிகளில் முன்னணி வகித்தன. ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், இந்தோனீசியா, சீனா ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதிகள் அதிக அளவில் சரிந்தன. மாதாந்திர அடிப்படையில் பார்க்கையில், ஆகஸ்ட் மாதத் தின் எண்ணெய் சாரா ஏற்றுமதிகள் 1.9% சரிந்தன. அது முன்னுரைக்கப்பட்ட 2.9 விழுக்காட்டை விடக் குறைவு. ஆகஸ்ட் மாதத்தின் மொத்த ஏற்றுமதிகளின் மதிப்பு $12.5 பில்லியன். அது முன்னைய மாதத்தில் பதிவான $12.7 பி. மதிப்புள்ள ஏற்றுமதிகளைக் காட்டிலும் சற்றுக் குறைவு.

Loading...
Load next