‘பன்மொழித் திறன் வாய்ப்புகளைப் பெருக்கும்’

வில்சன் சைலஸ்

அமைச்­சு­கள், அர­சாங்க அலு­வ­ல­கங்கள், ஊட­கங்கள் ஆகியவற்­ றில் பயன்­படுத்­தப்­படும் தமிழ், மலாய், சீன மொழிச் சொற்­களை தொடர்பு தகவல் அமைச்சு ஒரு­மு­கப்­படுத்தி வரு­கிறது. அதி­கா­ரத்­துவ மொழி­களில் உள்ள அர­சாங்கத்­தின் தகவல் தொடர்பை வலுப்­படுத்த மொழி­பெ­யர்ப்­பின் தரத்தை உயர்த்­து­வ­தில் அர­சாங்கம் கடப்­பாடு கொண்­டுள்­ளது என்று கூறியுள்ளார் தொடர்பு, தகவல் துணை அமைச்­சர் சீ ஹொங் டாட். உமறுப் புலவர் தமிழ்­மொழி நிலை­யத்­தில் நேற்று நடந்த மாண­வர்­களுக்கான தமிழ் மொழி­பெ­யர்ப்பு பயி­ல­ரங்­கில் கலந்­து­கொண்டு பேசிய அவர், “சரியான மொழி­பெ­யர்ப்பே நமது கடப்­பாடு” என்றார்.

அர­சாங்க தகவல் தொடர்பு ஆவ­ணங்களில் தமிழ் மொழி ­பெ­யர்ப்­பின் தரத்தை மேம்படுத்­து­வ­து­டன் மொழி­பெ­யர்ப்புப் பிழை­களை தவிர்க்கும் நோக்கில் தேசிய மொழி­பெ­யர்ப்­புக் குழுவின் தமிழ் மொழி­பெ­யர்ப்பு ஆலோசனைக் குழு தனது மறு­ஆய்­வின் பரிந்­துரை­களை ஆண்டு இறு­திக்­குள் தொடர்பு தகவல் அமைச்­சி­டம் சமர்ப்­பிக்­கும் என்றும் அவர் கூறினார். “பிற மொழி­களில் கருத்­து­களைப் பரி­மா­றும் திறன் அனைத்­ து­லக ரீதியில் விரி­வடை­யும் நிறு­வ­னங்களில் பணி­யாற்ற சாத­க ­மாக அமை­கிறது. அரசு மற்றும் தனியார் துறை­க ளில் வேலை வாய்ப்­பு­களைத் தேட இரு மொழி திறன் கைகொ­டுக்­கிறது,” என்று தெரிவித்தார் திரு சீ. பட்­ட­க்கல்வி மாணவர்களுக் கான புதிய தகவல் சேவை (மொழி­பெ­யர்ப்பு) உப­கா­ரச் சம்ப­ளம் குறித் ­தும் குறிப்­பிட்ட அவர், “இத்தகைய நிகழ்ச்­சி­களை மேலும் நடத்துவது குறித்து மாணவர்களின் கருத்­து­களை வர­வேற்­கி­றோம்,” என்று தமிழில் கூறினார்.

பயிலரங்கில் பங்கேற்ற மாணவர்கள் இடமிருந்து மெல்வின் ஹெலன், ஹபீசா ஐனி, அர்ஃபா மாலிக், அபிராமி குமரகுரு, பெர்னாமா செய்தி நிறுவனத்தின் செய்தி ஆசிரியர் காந்தி காசிநாதன், தொடர்பு, தகவல் துணை அமைச் சர் சீ ஹொங் டாட். படம்: திமத்தி டேவிட்

Loading...
Load next