வாழ்நாள் சாதனையாளர் விருது வென்ற ரெ.சோமசுந்தரம்: எ

எளிதில் மறக்கமுடியாத நிகழ்வு வசந்தம் ஒளிவழி நடத்திய இவ் வாண்டின் ‘பிரதான விழா’வில் ஆக உயரிய ‘வாழ்நாள் சாதனை யாளர் விருது’ மூத்த கலைஞரான திரு ரெ. சோமசுந்தரத்திற்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டு களுக்கு மேலாக கலைத்துறையில் ஈடுபட்டுள்ள அவர், உள்ளூர் வானொலியிலும் மேடையிலும் தொலைக்காட்சியிலும் ஏராளமான நாடகங்களை எழுதி, இயக்கி, நடித்துள்ளார். திரு சோமசுந்தரம் 2011ஆம் ஆண்டில் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் மேடை, தொலைக்காட்சி நாடகங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

ஒன்=நார்த் பகுதியில் அமைந் துள்ள புதிய மீடியாகார்ப் அரங்கில் நேற்று முன்தினம் இரவு நடந்தேறிய பிரதான விழாவில் திரு சோம சுந்தரத்திற்கு வாழ்நாள் சாதனை யாளர் விருதை வழங்கிக் கௌர வித்தார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தொடர்பு தகவல், கல்வி அமைச்சுகளுக்கான துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச் சேரி. விருதைப் பெற்றவுடன் விழா மேடையில் உரையாற்றிய திரு சோமசுந்தரம், தாம் கடந்து வந்த நீண்ட கலைப்பயணத்தையும் குடும்பத்தினரின் வலுவான ஆதர வையும் குறிப்பிட்டுப் பேசியபோது உணர்ச்சி மேலிட கண்கலங்கி னார். “ஒரு கலைஞருக்கு விருது வழங்கப்படுவது மிகப் பெரிய அங்கீகாரம். அதிலும், நான் எதிர் கொண்ட சிரமங்களுக்குப் பின் மனதில் மட்டற்ற மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கக் கூடியதுதான் இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது,” என்று தமிழ் முரசிடம் பின்னர் தெரிவித்தார் திரு சோம சுந்தரம்.

அதுமட்டுமல்லாமல் புதிய மீடியாகார்ப் அரங்கில் முதன் முறையாக நடத்தப்படும் பிரதான விழாவில் தமக்கு இவ்விருது கிடைத்திருப்பதைத் தம்மால் வாழ் நாள் முழுவதும் மறக்க இயலாது என்று கூறினார். “இப் போது என் மகன் கார்த்தி கேயனையும் இக்கலைத் துறையில் உருவாக்கியிருக்கிறேன் என்பது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது. இந்த பிரதான விழா வில் அவருக்குச் சிறந்த நடிகர் விருது கிடைக்க வேண்டும் என்று விரும்பினேன். அது இப்போது நிறைவேறியிருக்கிறது,” என்றார் அவர். அண்ணாமலை நாடகத்தில் பலர் பாராட்டும் அளவிற்கு கார்த் திகேயன் அவ்வளவு சிறப்பாக நடித்துள்ளதை மெச்சிய அவர், நல்ல தந்தையாக திகழ்ந்து நல்ல ஒரு ஒழுக்கமான பையனையும், நடிகனையும் தாம் உருவாக்கி உள்ளது தமக்கு அளவில்லா மகிழ்ச்சியைத் தருவதாகக் குறிப்பிட்டார்.

‘சதுரங்க வேட்டை’ தகவல் நிகழ்ச்சிக்கான சிறந்த படைப் பாளார் விருதையும் ‘அண்ணா மலை=2’ நாடகத்திற்கான சிறந்த நடிகர் விருதையும் தட்டிச் சென்ற கார்த்திகேயன், தந்தைக்கும் தமக் கும் ஒரே மேடையில் விருதுகள் கிடைத்திருப்பது வாழ்க்கையில் கிடைத்த பெரிய மகிழ்ச்சிகளுள் ஒன்று என்றார். “போட்டிமிகுந்த கலைத்துறையில் எனக்கு இரு விருதுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அதைவிட தந்தைக்கு வாழ்நாள் சாதனை யாளர் விருது கிடைத்தபோது என்னால் உணர்வுகளைக் கட்டுப் படுத்த இயலவில்லை,” என்றார் கார்த்திகேயன்.

வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட ரெ. சோமசுந்தரமும் இரு விருதுகளை வென்ற அவரது புதல்வர் கார்த்திகேயனும். படம்: வசந்தம்

Loading...
Load next