திறன், ஆர்வம் அடிப்படையில் பலதுறைத் தொழிற்கல்லூரிகளுக்கு முன்கூட்டியே தேர்வு

அடுத்த மாதம் பொதுக்கல்விச் சான்றிதழ் சாதாரண நிலைத் தேர்வு எழுதுவதற்கு முன்பே 3,680 உயர்நிலைப் பள்ளி மாணவர் களுக்குப் பலதுறைத் தொழிற்கல் லூரிகளில் தற்காலிகமாக இட மளிக்கப்பட்டுள்ளது. முன்னரே சேர்க்கும் நடவடிக் கையின் முடிவில் இந்த மாணவர் களுக்கு இடம் கிடைத்தது. மதிப்பெண்களை மட்டுமே கவ னத்தில் கொள்ளாமல், பாடத் துறைக்குத் தேவையான திறன் களும் ஆர்வமும் உள்ள மாண வர்கள் பட்டய வகுப்புகளில் சேர இந்நடவடிக்கை வாய்ப்பளிக்கிறது. முன்பு, நேரடி சேர்ப்பு நடவ டிக்கை, சிறப்புக் கூட்டுச் சேர்ப்பு நடவடிக்கை ஆகியவற்றின் மூலம் பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப் பட்டனர்.

ஒவ்வோர் ஆண்டும் பலதுறைத் தொழிற்கல்லூரியில் சேர்த்துக்கொள்ளப்படும் மொத்த மாணவர்களில் முறையே 2.5 மற்றும் 5 விழுக்காட்டினர் வரை இவ்விரு நடவடிக்கைகளின் மூலம் சேர்த் துக் கொள்ளப்பட்டனர். இவ்விரு நடவடிக்கைகளுக்கும் பதிலாக முன்னரே சேர்க்கும் நடவ டிக்கை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்காலிக கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்) ஓங் யி காங், நேற்றுக் காலை தமது ஃபேஸ்புக் பதிவில் புள்ளி விவ ரங்களை வெளியிட்டார்.

பெரும்பாலான மாணவர்க ளுக்கு ஆரம்பக்கல்வி, பொதுத் தொடர்பு, தாதிமை, காட்சித் தொடர்பு, ஊடக வடிவமைப்பு, விளையாட்டு, உடற்பயிற்சியியல் போன்ற பாடத்துறைகளில் இடம ளிக்கப்பட்டதாகவும் அவர் தெரி வித்தார். இந்தத் துறைகளில் சீரிய திறன் பெறுவதற்கு ஆர்வமும் திற மையும் அத்தியாவசியம். எடுத்துக் காட்டாக, முன்னரே இடமளிக் கப்பட்ட மாணவர்களில் 13.8 விழுக்காட்டினருக்கு ஆரம்பக்கல் விப் பாடத்துறையிலும், 3.5 விழுக் காட்டினருக்குத் தாதிமை துறை யிலும் இடம் வழங்கப்பட்டது. இடம் வழங்கப்பட்டவர்களில் 72 விழுக்காட்டினர் முதல் விருப்ப மாகத் தேர்ந்தெடுத்த பாடத்துறை களைப் பெற்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!