அமைச்சர் டான்: வாழ்க்கையைத் தொடங்கும் தம்பதிகளுக்கு நல்வழி காட்டும் திருமணப் பதிவாளர்கள்

உரிமம் பெற்ற 400 திருமணப் பதிவாளர்களுக்கு நன்றி கூறும் வகையில் நேற்று அவர்களுக்கென ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட் டது. திருமணப் பதிவாளர்கள் ஒவ் வோர் ஆண்டும் 20,000க்கு மேற் பட்ட சிவில் திருமணங்களை அதிகாரபூர்வமாக நடத்தி வைக் கின்றனர். கிராண்ட் காப்தான் வாட்டர்ஃ பிரண்ட் ஹோட்டல் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டான் சுவான் ஜின், “நீங்கள் ஒவ்வொரு முறையும் திருமணத்தை நடத்தி வைக்க மட்டும் அங்கு செல்லவில்லை. மாறாக, அந்தத் தம்பதிகள் வாழ்க் கையில் சரியான நோக்கத்துடன் அடி எடுத்து வைக்க உதவுவதில் நீங்களும் முக்கியப் பங்கு வகிக் கிறீர்கள்,” என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் இணைப் பேராசிரியர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிமும் கலந்து கொண்டார். 1970களிலிருந்து திருமணப் பதிவுப் பணியில் சேவையாற்றி வரும் முன்னோடித் திருமணப் பதிவாளர்களுக்கு நன்றி கூறும் சிறப்பு அங்கமும் இடம்பெற்றது. சிவில் திருமணப் பதிவு சிங் கப்பூரில் தொடக்கப்பட்ட 55வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 1961 செப்டம்பர் மாதத் தில் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்த தம்பதிகளுக்குத் திருமணப் பதிவகம் நினைவு திரு மணச் சான்றிதழை வழங்கி சிறப் பிக்கும்.

 

திருமணப் பதிவாளர்களாகத் தொடர்ந்து சேவையாற்றி வரும் திரு முருகையா சுப்பையா-திருமதி கோவிந்தா இரா தம்பதிகள். இருவருக்கும் வயது 72.  படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

Loading...
Load next