யோகா கற்க வந்த பெண்ணை மானபங்கம் செய்ததாக பயிற்றுவிப்பாளர் மீது குற்றச்சாட்டு

தம்மிடம் யோகாசனம் கற்க வந்த பெண்ணை மானபங்கம் செய்த தாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 24 வயது ராக்கேஷ் குமார் பிரசாத் நேற்று நீதிமன்றம் முன் நிறுத்தப் பட்டார். மானபங்கம் செய்தல், பலவந்தப் படுத்துதல் ஆகிய குற்றங்களின் பேரில் தலா ஒரு குற்றச்சாட்டை அவர் எதிர்நோக்குகிறார். யோகாசனப் பயிற்று விப்பாளரான ராக்கேஷ் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதியன்று தெம்பனிஸ் வட்டாரத் தில் உள்ள ரியல் யோகா ஸ்டூடியோவில் அந்தப் பெண் ணுக்கு யோகாசனம் கற்பித்துக் கொண்டிருந்தபோது அவரை மூன்று முறை மானபங்கம் செய்தார் என்று கூறப்படுகிறது.

நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண் சாட்சியம் அளித்தார். சம்பவம் நிகழ்ந்த நாளன்று நடந்தவற்றைப் பற்றி அவர் நீதிமன்றத்தில் விவரித்தார். தாம் யோகாசனம் செய்துகொண் டிருந்தபோது ராக்கேஷ் தம்மை முறையற்ற வகையில் தொட்டதாக அவர் கூறினார். அதற்குத் தாம் மறுப்பு தெரிவித்ததாக அந்தப் பெண் கூறினார். ஆனால் தமது மறுப்பையும் மீறி ராக்கேஷ் மீண்டும் மீண்டும் தம்மை மானபங்கம் செய்ததாக பாதிக்கப் பட்ட பெண் தெரிவித்தார்.

யோகாசன வகுப்பு முடிந்ததும் அந்த அறையைவிட்டு அந்தப் பெண் வெளியேற முற்பட்டபோது ராக்கேஷ் அவரது கழுத்தைப் பிடித்துக்கொண்டதாக அறியப்படு கிறது. இந்தச் சம்பவங்கள் கண் காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. இந்தக் காணொளிப் பதிவுகள் நீதிமன்றத்தில் காட்டப் பட்டன. மானபங்கம் செய்யப் பட்டதும் ஏன் உடனடியாக உதவி கோர வில்லை என்று ராக்கே‌ஷின் வழக்கறிஞர் பாதிக்கப்பட்ட பெண் ணிடம் நீதிமன்றத்தில் கேட்டார். அதற்குப் பதிலளித்த அந்தப் பெண், அந்த இடத்தில் பணியாற்றும் ஊழியர் யாரையும் தமக்குத் தெரியாது என்றும் தம்மைத் தற்காத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாகவும் கூறி அழுதார்.

மானபங்க குற்றச்சாட்டை எதிர்நோக்கும் ராக்கேஷ் குமார் பிரசாத். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!