வலுவான நிதிக் கட்டமைப்பு

சட்­ட­வி­ரோதப் பணப் பரி­வர்த்­தனை, பயங்க­ர­வாத செயல்­களுக்­கான நிதிப் பட்­டு­வாடா ஆகி­ய­வற்றைத் தடுக்­கும் வலுவான கட்­டமைப்பை சிங்கப்­பூ­ரின் நிதி அமைப்பு கொண்­டி­ருப்­ப­தாக உலக பணிக்­குழு தெரி­வித்­துள்­ளது. அதே­ நே­ரத்­தில், சிங்கப்­பூ­ரின் நிதி அமைப்பு மேம்பாடு காண வேண்­டி­ய அம்சங்கள் பற்­றி­யும் அந்த நிதித்­துறைச் செய­லாக்கப் பணிக்­குழு (FATF) கூறியுள்­ளது. உதா­ர­ண­மாக அதி­க­ரித்து வரும் ஆபத்­து­கள் குறித்து நிதி நிறு­வ­னங்களின் புரிந்­து­ணர்வை வலுப்­படுத்­து­வது, சிக்­க­லான, எல்லை­கள் கடந்த சட்­ட­வி­ரோதப் பணப் பரி­வர்த்­தனைக் குற்­றச் ­செ­யல்­களைத் தடுக்கும் நடவடிக் கைகள் போன்ற­வற்றில் அதிக மாக ஈடுபட வேண்டும் என்று அந்த அமைப்பு சுட்­டி­யுள்­ளது.

நிதித்­துறைச் செய­லாக்க பணிக்­கு­ழு­வின் 2008 ஆய்­வ­றிக்கையைத் தொடர்ந்து, சட்­ட­வி­ரோதப் பணப் பரி­வர்த்­தனை, பயங்க­ர­வாதச் செயல்­ களுக்­கான நிதிப் பட்­டு­வாடா நட­வ­டிக்கை­களில் சிங்கப்­பூர் குறிப்­பி­டத்­தக்க மேம்பாட்டை அடைந்­துள்­ள­தாக உள்துறை அமைச்சு, நிதி அமைச்சு, சிங்கப்பூர் நாணய ஆணையம் ஆகியவை இணைந்து வெளி­யிட்ட அறிக்கை தெரி­வித்­தது. கறாரான தரக்­கட்­டுப்­பாட்டை நிதித்­துறை செய­லாக்க பணிக்­குழு 2012ல் அறி­மு­கப்­படுத்­தி ­ய­தற்­கு பின் வெளி­வந்­துள்ள இந்த முதல் அறிக்கை, சட்ட­ வி­ரோத பணப் பரி­வர்த்­தனை, பயங்க­ர­வாதச் செயல்­களுக்­கான நிதிப் பட்­டு­வாடா நட­வ­டிக்கை­களில் பல முக்கிய பிரி­வு­களில் சிங்கப்­பூர் பய­னுள்ள விளை­வு­களைக் கண்­டுள்­ளதைக் குறிப்­பிட்­டுள்­ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஓவியரின் கைவண்ணத்தில் 'அமராவதி நகர்' திட்டத்துக்காக வரையப்பட்ட மாதிரிப் படம். படம்: ஊடகம்

13 Nov 2019

'அமராவதி நகர்' திட்டம் கைவிடப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு

‘ஸ்டூண்ட்- ரன் பார்க்’ நடவடிக்கையில் சுமார் 40 மாணவர்கள் ஈடுபட்டனர். வகுப்பில் கற்றவற்றை நடைமுறைப்படுத்திப் பார்த்ததுடன் பல்வேறு புதுமைகளையும் அவர்கள் கையாண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

13 Nov 2019

மாணவர்கள் நிர்வகிக்கும் பூங்கா திட்டம் விரிவடைகிறது