‘ரீச்’ கருத்தறியும் பிரிவுக்கு புதிய ஆலோசனைக் குழுவினர்

அரசாங்கக் கருத்தறியும் பிரிவான ‘ரீச்’ தனது ஆறாவது ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களை நேற்று அறிவித் தது. 29 உறுப்பினர்கள் கொண்ட அக்குழுவில் 12 பேர் புதியவர்கள். அவர்கள் இம்மாதம் 1ஆம் தேதி தொடக்கம் ஈராண்டுக்குச் செயலாற்றுவார்கள். ஓர் இளம் தொழில்முனைவர், உடற்குறையுள்ள சமூகத்துக்காக வாதாடும் ஒரு வழக்குரைஞர், தகவல் அறிவியலாளர், பல்கலைக்கழக மாணவர்கள், இளம் தொழில் நிபுணர்கள் என்று வெவ்வெறு பின்னணிகளைச் சேர்ந்தவர்கள் இந்தக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று ரீச் கூறியது. ஆலோசனைக் குழுவுக்கு மனித வளம் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் துணை அமைச்சர் சேம் டான் தலைமை தாங்குவார். திரு டான், கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி முதல் ரீச் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஆலோசனைக் குழுவுக்கு உள்துறை அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமினும் செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயரும் துணைத் தலைவர்களாக இருப்பார்கள். இவர்கள் இருவரும் 2012ஆம் ஆண்டிலிருந்து ரீச் ஆலோசனைக் குழுவில் அங்கம் வகித்து வருகின்றனர். “புதிய சவால்களை நாம் சந்தித்துக் கொண்டிருப்பதால் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடமிருந்து கருத்து களைக் கண்டறியும் நோக்கத்தில் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களையும் வெவ்வேறு பிரிவுகளிலிருந்து தேர்வு செய்துள்ளோம்,” என்றார் ரீச் குழுவின் தலைவர் திரு டான்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கப்பலில் இருந்த மருத்துவ உதவிக்குழு இதய சுவாசமூட்டல் உட்பட பல்வேறு சிகிச்சைகள் அளித்தபோதும் சிறுவனை உயிர்ப்பிக்க முடியவில்லை என்று பேச்சாளர் குறிப்பிட்டார். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Nov 2019

சிங்கப்பூரிலிருந்து கிளம்பிய சொகுசுக் கப்பலின் நீச்சல் குளத்தில் மூழ்கி 10 வயது சிறுவன் மரணம்

காணொளி பதிவேற்றப்படுவதற்கு முன்பாக புகைப்படம் அந்த இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. படம், காணொளி: ‘ஃபிக்சீஎஸ்ஜிமீம்ஸ்’ எனும் ‘மீம்’ இன்ஸ்டகிராம் பக்கம்

19 Nov 2019

நடைபாதைக் கூரையின்மீது மின்-ஸ்கூட்டர் ஓட்டிய இளையர்

மனைவியுடனான சிறு கருத்து வேறுபாடுகளுக்குக்கூட அவரை அடிக்கும் பழக்கம் கொண்ட ரிட்ஸுவான் மேகா அப்துல் ரஹ்மான், அந்தப் பழக்கத்தை மாற்றுவதற்காக கோபத்தை சிறுவன் மீது திருப்பியதாக தடயவியல் மனநோய் நிபுணரான மருத்துவர் சியோவ் எங்குவானிடம் தெரிவித்தார். படம்: ஃபேஸ்புக்

19 Nov 2019

கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டு இறந்த சிறுவன்: பாடம் புகட்ட எண்ணி உள்ளங்கையில் சூடுபோட்ட தந்தை