பணிப்பெண்ணைப் பட்டினிப்போட்ட மாது மனநோயால் பாதிக்கப்பட்டவர்

பணிப்பெண்ணைப் பட்டினிப் போட்ட இல்லத்தரசியான சோங் சூய் ஃபூன் Obsessive Compulsive Disorder எனுப்படும் மனநோயாலும் உணவு உண்பது தொடர்பான மனநோயாலும் பாதிக்கப்பட்டவர் என்று மனநல மருத்துவர்கள் இருவர் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தனர். திருவாட்டி தெல்மா ஒயாசான் காவிடான் என்ற அந்தப் பணிப்பெண்ணை சோங்கும் அவரது கணவரான லிம் சூன் ஹோங்கும் சேர்ந்து பட்டினிப்போட்டது கடந்த மார்ச் மாதம் நிரூபணமானது. திருவாட்டி தெல்மா 15 மாதங்களில் ஏறத்தாழ 20 கிலோ எடை குறைந்தார்.

மனநோய் காரணமாக சோங் பணிப்பெண்ணைப் பட்டினி போட்டார் என்பதை ஏற்க அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் மறுத்துவிட்டனர். இந்த வழக்கு விசாரணை இன்று தொடர்கிறது. மனநலக் கழகத்தைச் சேர்ந்த மனநல மருத்துவர் டாக்டர் ஸ்டீவன் பாங் இன்று சாட்சியம் அளிப்பார்.

பணிப்பெண்ணுக்கு உணவு தர மறுத்த சோங் சூய் ஃபூன். படம்: தி நியூபேப்பர்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!