அங் மோ கியோ வட்டாரத்தில் தீப்பிடித்துக் கருகிய கார்

அங் மோ கியோ வட்டாரத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் கார் ஒன்று நேற்று திடீரென்று தீப்பிடித்துக்கொண்டது. இந்தத் தீச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. அங் மோ கியோ அவென்யூ 4 புளோக் 609 அருகில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் கார் தீப்பிடித்துக்கொண்டது குறித்து நேற்று மாலை 4.38 மணிக்குக் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது. காரின் இயந்திரப் பகுதி யிலிருந்து தீப்பிழம்புகள் கிளம் பியதாக அறியப்படுகிறது. சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் தண்ணீர் பாய்ச்சித் தீயை அணைத்தனர். கார் தீப்பிடித்துக்கொண்டபோது அதி லிருந்து வெடிப்புகள் கேட்டதாக அந்த வட்டாரக் குடியிருப்பாளர்கள் கூறியதாக ‌ஷின்மின் நாளிதழ் தெரிவித்தது.

தீயில் கருகிய காருக்குப் பக்கத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த லாரி ஒன்றும் கார் ஒன்றும் சேதமடைந்தன. கடந்த நான்கு நாட்களில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வாகன நிறுத்துமிடத்தில் வாகனம் தீப் பிடித்துக்கொண்ட மூன்றாவது சம்பவம் இது. கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை தெம்பனிஸ் ஸ்திரீட் 44 புளோக் 464ல் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் கார் ஒன்று தீப்பிடித்துக்கொண்டது. அதிகாலை 4.40 மணிக்கு அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. சனிக்கிழமையன்று உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் கார் ஒன்று தீப் பிடித்துக்கொண்டது.

அங் மோ கியோ வட்டாரத்தில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் திடீரென்று தீப்பிடித்துக்கொண்ட கார் தீக்கு இரையாகி கருகியது. பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரும் சேதம் அடைந்தது. படம்: ‌ஷின்மின்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிறுவன் அடைத்து வைக்கப்பட்டிருந்த கூண்டு. படம்: நீதிமன்ற ஆவணங்கள்

15 Nov 2019

துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்ட சிறுவன்: உடனடி சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம்

பாதிக்கப்பட்டவர்களைப்போல, மல்கர்-பிரியங்கா தம்பதி நம்பத்தகுந்த சாட்சியங்களாக இல்லை என்று நேற்றுத் தீர்ப்பு வாசித்தபோது மாவட்ட நீதிபதி சைஃபுதீன் சருவான் கூறினார். கோப்புப்படம்

15 Nov 2019

வெளிநாட்டு ஊழியர்களின் உழைப்பைச் சுரண்டிய இந்தியத் தம்பதி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்

கடந்த ஏப்ரல் மாதத்தில் செயல்படத் தொடங்கிய ஜுவல் வளாகத்தை 50 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். படம்: சாவ் பாவ்

15 Nov 2019

அனைத்துலக அளவில் சிறப்பு விருது பெற்று மேலும் மிளிர்கிறது ‘ஜுவல்’