வரலாறும் இயற்கையும் இணையும் பூங்கா

எதிர்­வ­ரும் 2018ஆம் ஆண்டின் முடிவில் அமை­ய­வுள்ள தாம்சன் இயற்கைப் பூங்கா­வில் சிங்கப்­பூ­ரின் வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க பகுதி களைக் கண்டு களிக்­க­லாம். ஐம்பது ஹெக்டர் நிலப்­ப­ரப்­பில் அமை­ய­வுள்ள இந்தப் பூங்கா­வில் ஹய்னான் கிரா­மத்தின் சுவடு களையும் அங்கிருந்த ரம்­புத்­தான் பழ மரங்களையும் காணலாம். அங்­கி­ருந்த பழைய வீடுகள், மாடிப்படிகள், கிராமத்தின் அடித் ­த­ளங்கள், நடை­பாதை­கள் போன்ற வற்றைப் பார்ப்பதுடன், மத்திய நீர்த்­தேக்­கப் பகு­திக்கு அடுத்து அமை­ய­வுள்ள தாம்சன் இயற்கைப் பூங்காவில் சிங்கப்­பூ­ரின் செழிப்­பு­மிக்க பன்­மு­கத்­தன்மை கொண்ட உயி­ரி­னங்களை­யும் காணும் அரிய வாய்ப்­புக் கிட்டும்.

காலத்­தால் அழியாத இந்த இயற்கைப் பூங்கா­வில் ஐம்பது ஆண்டு பழமை­யான மரங்கள் உண்டு. மேலும், சாம்பா எனப்­படும் அரியவகை மான் இனம், சிறுத்தை பூனை ஆகி­ய­வற்­றின் நட­மாட்­டத்தை­யும் காணலாம். தாம்சன் இயற்கைப் பூங்காத் திட்­டத்தை நேற்று வெளி­யிட்ட தேசிய பூங்காக் கழகம், இதற்­கான பணிகள் அடுத்த ஆண்டு தொடங்­கும்­போது அந்த வனப் பகு­தி­யின் எழிலை மேம்படுத்தி அங்­குள்ள அரிய வகை விலங்கு கள் உயிர்­வாழ ஏதுவாக அப்பகுதிக்கே உரித்­தான மரங்களை அங்கு நட திட்­ட­மிட்­டுள்­ள­தாகத் தெரி­வித்­தது. மத்திய நீர்த்­தேக்­கப் பகு­தி­யின் அரு­காமையை பசுமை­யாக்­கு­வதன் ஓர் அங்க­மாக நான்கு இயற்கைப் பூங்காக்­களை அமைக்­கும் திட்­டத்தை தேசிய பூங்காக் கழகம் 2014ஆம் ஆண்டு அறி­வித்­தது.

இதில் தாம்சன் இயற்கைப் பூங்கா­வும் ஒன்று. இந்தத் திட்டத் தில் ஸ்ப்­ரிங்­லீ­ஃப், செஸ்ட்­நட், வின்சோர் என மேலும் மூன்று இயற்கைப் பூங்காக்­கள் அமைக்கப் படும். இதில் வின்சோர் இயற்கைப் பூங்கா ­வ­ரும் 2017ஆம் ஆண்டு தொடக்­கத்­தில் பொதுமக்­களுக்கு திறந்து விடப்­படும்.

 

தாம்சன் இயற்கைப் பூங்கா அமையவுள்ள இந்த இடம் முன்னர் ஹய்னான் கிராமமாக இருந்தது. கிராமத்தின் சிதைவுகள் இன்னும் அங்கே உள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

Loading...
Load next