இணையம் வழி மிரட்டல்: இணைந்து செயல்பட அழைப்பு

இணையம் வழி மிரட்டல்களை ஆசியான் உறுப்பிய நாடுகள் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் யாக்கூப் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார். பல்வேறு வகையான இணையம் வழி தாக்குதல்களுக்கு ஆசியான் நாடுகளின் அரசாங்கங்கள் இலக் காகும் அபாயம் அதிகம் இருப்ப தால் அவற்றை எதிர்கொள்ள ஒரு பொதுவான தளத்தை அமைக்க வேண்டும் என்றார் அவர்.

இந்தப் பொதுத் தளத்தை அமைக்க ஆசியான் நாடுகளிடை யிலான ஒத்துழைப்பைத் தீவிரப் படுத்த சிங்கப்பூர் அரசாங்கம் விரும்புவதாக அமைச்சர் விளக்கி னார். ஆசியான் நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களுக்காக முதல்முறை யாக நடத்தப்படும் இணையப் பாதுகாப்பு தொடர்பான மாநாடு நேற்று ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்றது. அதில் பேசிய டாக்டர் யாக்கூப், ஆசியான் நாடுகள் கவனம் செலுத்தவேண்டிய மூன்று முக்கிய பகுதிகளை அடையாளம் கண்டு மேற்கோள் காட்டினார். இணையம் வழி மிரட்டல்களை முழுமையாக எதிர்கொள்ள இணையம் வழி குற்றங்கள், உளவு பார்த்தல், பாதிப்பு உண்டாக்கக் கூடிய மற்ற நடவடிக்கைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று இணையப் பாதுகாப்புக்குத் தலைமை தாங்கும் அமைச்சருமான டாக்டர் யாக்கூப் வலியுறுத்தினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தலையை வேனில் மோதியதால் குழந்தை இறந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. படம்: ஃபேஸ்புக்

12 Nov 2019

தலையை காரில் மோதியதில் குழந்தை உயிரிழப்பு; தாயின் ஆண் நண்பர்மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூர் நாணய ஆணைய பசுமை செயல்திட்டத்தின் பல புதிய முயற்சிகளை நேற்று தொடங்கி வைத்துப் பேசினார் கல்வி அமைச்சர் ஓங் யி காங் . படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Nov 2019

பருவநிலை பசுமை திட்டங்களுக்கு US$2 பில்லியன் முதலீடு

கூடுதல் வசதிகளுடன் கூடிய புதிய மின்சாரப் பேருந்துகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Nov 2019

அடுத்த ஆண்டு துவக்கத்திலிருந்து 60 மின்சாரப் பேருந்துகள்