டெங்கி சம்பவங்கள் வெகுவாகக் குறைந்தன

சிங்கப்பூரில் டெங்கி சம்பவங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன. இந்த ஆண்டின் மிகக் குறைந்த அளவாகக் கடந்த வாரம் 125 பேருக்கு மட்டுமே டெங்கி நோய் தொற்று கண்டதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது. அதற்கு முந்திய வாரத்தில் 137 பேருக்கு டெங்கி தொற்று கண்டிருந்தது. தொடர்ந்து ஐந்து வாரங்களாக டெங்கி தொற்று சம்பவங்கள் குறைந்து வருகின்றன. நேற்று முன்தினம் நிலவரப்படி இவ் வாண்டு தொடக்கத்திலிருந்து மொத்தம் 12,170 டெங்கி சம்பவங் கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2015ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட டெங்கி சம்பவங் களைவிட இது அதிகம். 2015ஆம் ஆண்டில் மொத்தம் 11,286 பேர் டெங்கியால் பாதிக்கப்பட்டனர். டெங்கி சம்பவங்கள் குறைந்து வந்தாலும் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களை வாரியம் கேட்டுக்கொண்டது. ஏடிஸ் கொசுக்களை ஒழிக்கவும் டெங்கி சம்பவங்களைத் தவிர்க்க வும் ஒரு சமூகமாக இருந்து செயல்படவேண்டும் என்று அது வலியுறுத்தியது. டெங்கி காய்ச்சல், ஸிக்கா சிக்குன்குன்யா, முதலிய நோய் களுக்கு ஏடிஸ் கொசுக்கள் காரணமாக இருக்கின்றன. இந்நிலையில், உலகின் முதல் டெங்கி தடுப்பு ஊசி மருந்தை சிங்கப்பூருக்குக் கொண்டு வர சுகாதார அறிவியல் ஆணையம் கடந்த வாரம் அனுமதி வழங்கியது. நேற்று முன்தினம் நிலவரப்படி சிங்கப்பூரில் 28 வட்டாரங்கள் டெங்கியால் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஆறு வட்டாரங்களில் நிலைமை அபாயகரமானதாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கோப்புப்படம்: நியூ கிரியேஷன் தேவாலயம்/ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

22 Nov 2019

$300 மில்லியனுக்கு கடைத் தொகுதியை வாங்கிய நியூ கிரியேஷன் தேவாலயம்

2012ல் கேரோசல் நிறுவனத்தை (இடமிருந்து) மார்கஸ் டான், குவெக் சியூ ருய், லுகாஸ் நூ ஆகியோர் தொடங்கினர். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

22 Nov 2019

‘கேரோசல்’ இணையத் தளத்தின் மதிப்பு ஒரு பில்லியன் வெள்ளியாக அதிகரிப்பு