‘கண்ணோட்டம் மாறினால் காட்சியும் மாறும்’

வெள்­­­ளி­­­நிலா குணாளன்

'தொண்­­­டூ­­­ழி­­­யத்­­­தில் ஈடு­­­படு­­­வதற்கு ஊக்­­­கத்­­­தொகை கொடுப்­­­பது சரியா?', 'தொண்­­­டூ­­­ழி­­­யத்­­­தில் ஈடுபட வேண்டும் என்ற எண்­­­ணத்தை வளர்ப்­­­பது எப்படி?', 'அறி­­­வார்ந்த நாடும் அறி­­­வார்ந்த இயக்­­­க­­­மும்', அதாவது தொழில்­­­நுட்­­­பம் கொண்டு தொண்­­­டூ­­­ழி­­­யத்தை வளர்க்­­­கும் வழி­­­முறை­­­கள், திற­­­னுக்கு ஏற்ப தொண்­­­டூ­­­ழி­­­யம் செய்யும் வழிமுறை, ஓர் இயக்­­­கத்­­­தி­­­லி­­­ருந்து வாழ்க்கை­­­முறை­­­யாக மாற்றும் முயற்சி, தொண்­­­டூ­­­ழி­­­யத்தை ஒரு கட்­­­டமைப்­­­புக்­­­குள் கொண்­­­டு­­­வ­­­ரு­­­வதன் அவ­­­சி­­­யம் ஆகியவை பற்றி சுமார் 50 இளை­யர்­கள் கலந்­துரை­யா­டி­னர். 'எல்லை­­­யற்ற திறன்கள் முடி­­­வற்ற சாத்­­­தி­­­யங்கள்' என்ற கருப்­­­பொ­­­ருளைக் கொண்ட இந்தக் கருத்­­­த­­­ரங்கில் பல­த­­­ரப்­­­பட்ட வாழ்க்கைச் சூழலில் இருந்து வந்­­­தி­­­ருந்த இந்த இளை­­­யர்­­­கள், வெவ்வேறு குழுக்க­­­ளா­­­கப் பிரிந்து தொண்­­­டூ­­­ழி­­­யம் சார்ந்த மேற்­கண்ட தலைப்­­­பு­­­களில் உரையாடினர்.

இம்­மா­தம் ஒன்றாம் தேதி, சனிக்­­­கிழமை காலைப் பொழுதில் கிங் ஜார்ஜஸ் அவென்­­­யூ­­­வி­­­ல் உள்ள மக்கள் கழகத் தலைமை ­­­ய­­­கத்­­­தில் நற்­­­ப­­­ணிப் பேரவை­­­யின் இளையர் பிரிவு நடத்­­­திய 'யூத் கனெக்­­­ஷன்' என்ற நிகழ்ச்­­­சி­­­யில் இந்தக் கலந்­துரை­யா­டல் மேற்­ கொள்­ளப்­பட்­டது. குழு கலந்தா­­­லோ­­­சனை­­­கள், குழு விளை­­­யாட்­­­டு­­­கள் ஆகி­ய­வற்­றில் ஈடு­பட்ட இளை­­­யர்­­­கள், மதிய உண­­­வுக்­­­குப் பிறகு நற்­­­ப­­­ணிப்­­­ பே­­­ரவை­­­யின் இளையர் பிரிவைச் சேர்ந்த திரு தேவன் வழி­­­ந­­­டத்­­­திய சிறப்­­­புப் பேச்­­­சா­­­ளர்­­­களு­­­டனான சுவா­­­ர­­­சி­­­ய­­­மான கலந்­­­துரை­­­யா­­­டலில் கலந்­­­து­­­கொண்ட­­­னர்.

மாற்­­­றுத்­­­தி­­­றன் விளை­­­யாட்­­­டா­­­ள­­­ரான திரு ஹித்தேஷ் ஆற்றிய உரை இளை­யர்­களுக்கு ஊக்­க ­ம­ளிப்­ப­தாக அமைந்­தி­ருந்தது. அவர் பெருமூளை வாதத்­­­தால் பாதிக்­­­கப்­­­பட்­­­டி­­­ருந்தா­­­லும் நகைச்­­­சுவை குறை­­­யா­­­மல் பேசிப் பார்வை­­­யா­­­ளர்­­­களின் கவ­­­னத்தை ஈர்த்­­­த­­­தோடு கூடி­யி­ருந்­தோர் மனங்களை­யும் நெகிழச் செய்தார். தொடர்பு, தகவல் அமைச்சு, கல்வி அமைச்சு ஆகியவற்றின் துணை அமைச்சரும் நற்­­­ப­­­ணிப் பேரவை­­­யின் ஆலோ­­­ச­­­கருமான டாக்டர் ஜனில் புதுச்­­­சேரி, நற் ப­­­ணிப் பேரவை­­­யின் துணைத்­­­தலை­­­வர்­­­களில் ஒரு­­­வ­­­ரும் முப்பது ஆண்­­­டு­­­களுக்கு மேல் தொண்­­­ டூ­­­ழிய அனு­­­ப­­­வம் கொண்டவருமான திரு பாலச்­­­சந்­­­திர கோவிந்த­­­சாமி, எலும்­­­பி­­­யல் அறுவை சிகிச்சை நிபுண­­­ரும் இமய மலை­­­யுச்­­­சியை அடைந்த இரு சிங்கப்­­­பூ­­­ரர்­­­களில் ஒரு­­­வருமான டாக்டர் குமரன் ராசப்­­­பன் ஆகியோர் கலந்­­­துரை ­­­யா­­­ட­­­லில் இளையர்களின் சந்தேகங்களுக்குப் பதிலளித்தனர். ­

கேள்வி- பதில் அங்கத்­­­தில், 'வெளிநாடுகளுக்குச் சென்று தொண்­­­டூ­­­ழி­­­யம் புரியப் பல இளை­­­யர்­­­கள் விரும்­­­புவதன் காரணம் என்ன?' என்பது போன்ற கேள்விக் கணைகளை இளை­­­யர்­­­கள் தொடுத்­­­த­­­னர்.

கிங் ஜார்ஜஸ் அவென்­யூ­வி­லுள்ள மக்கள் கழக தலைமை­ய­கத்­தில் நற்­ப­ணிப் பேரவை­யின் இளையர் பிரிவு நடத்­திய 'யூத் கனெக்­ஷன்' நிகழ்ச்­சி­யில் பங்கேற்ற இளையர்கள். படம்: நற்பணிப் பேரவையின் இளையர் பிரிவு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!