முன்னாள் தலைமை நிர்வாகிக்கு 31 மாதம் சிறைத்தண்டனை

உணவு, பான தொழில்துறையைச் சேர்ந்த முன்னாள் தலைமை நிர்வாகி ஒருவர், தன்னிடம் நம்பி ஒப்படைக்கப் பட்ட $200,000க்கும் அதிக தொகையைத் தவறாகக் கையாண்டுவிட்டார். வில்லியம் ஆங் கோக் ஹாய், 43, என்ற அந்த நிர்வாகி, 2014ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதிக்கும் நவம்பர் 25ஆம் தேதிக்கும் இடையில் நம்பிக்கை மோசடி செய்து $286,232 தொகையைத் தவறாக பயன்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்டார். சன்டெக் எஃப் & பி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருந்தபோது அவர் இந்தக் காரியத்தைச் செய்தார். வில்லியம் ஆங்கிற்கு 31 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கடன்முதலைகளிடம் தன்னுடைய சகோதரர் மாட்டிக்கொண்டதாகவும் அவர் கடன் பட்டத் தொகையைத் தான் அடைப்பதாகவும் அதற்காக பணத்தை தான் பயன்படுத்திக்கொண்டதாகவும் வில்லியம் ஆங் தன் நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார்.

அதை நம்பிய அவருடைய நிறுவனம், பரிதாபப்பட்டு தவணை முறையில் பணத்தைத் திருப்பி அடைக்கும்படி அவருக்கு வாய்ப்பு அளித்தது. ஆனால் வில்லியம் ஆங் பொய் சொல்லி இருக்கிறார் என்பது பின்னர் தெரியவந்தது. அதனையடுத்து 2015 நவம்பர் 24ஆம் தேதி போலிசில் புகார் செய்யப்பட்டது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மின்ஸ்கூட்டர் தடை: பாதிக்கப்பட்ட உணவு விநியோக ஓட்டுநர்களுக்கு ஆதரவாக 100க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் குரல் கொடுத்துள்ளனர். (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

18 Nov 2019

உணவு விநியோக ஓட்டுநர்களுக்கு மாணவர்கள் ஆதரவுக் குரல்

‘கியட் ஹொங் குளோஸ்’ (Keat Hong Close) பகுதியில் அமைந்திருக்கும் புளோக் 805ல் இருக்கும் தடுப்பு வேலி ஒன்றில் டாக்சி மோதிய சம்பவம் படங்கள்: ஸ்டாம்ப்

18 Nov 2019

தடுப்பு வேலியில் மோதிப் பெண் டாக்சி ஓட்டுநரும் பயணியும் காயம்

தீயைக் கட்டுக்குள் கொண்டுவர உழைக்கும் தீயணைப்பு வீரர்கள் (படங்கள்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை/ ஃபேஸ்புக்)

18 Nov 2019

தை செங் எம்ஆர்டி நிலையம் அருகே தீ