சுற்றுப்புற மன்றத்தின் நிர்வாக இயக்குநர் இடைநீக்கம்

சிங்கப்பூர் சுற்றுப்புற மன்றத்தின் நிர்வாக இயக்குநர் எட்வின் சியா பணியிலிருந்து இடைக் காலமாக நீக்கப்பட்டிருக் கிறார் என்பது தெரியவந் திருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. தான் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு காரணம் தெரியவில்லை என்று திரு சியா கூறிய தாக அந்தச் செய்தித்தாள் தெரிவித்தது. அந்தச் செய்தி தனக்கு நேற்று அக்டோபர் 13ஆம் தேதி காலைதான் தெரிவிக்கப் பட்டதாகவும் திரு சியா குறிப்பிட்டு இருக்கிறார். "அதிகாரபூர்வ வேலை நிமித்தமாக வெள்ளி இரவு நான் பயணம் மேற்கொள்ளவிருந்தேன்.

இந்த நிலையில் காரணம் எதுவும் குறிப்பிடாமல் நான் பணியிலிருந்து நீக்கப்பட்டிருப் பது எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது," என்றும் திரு சியா தெரிவித்தார். மன்றத்தின் நிர்வாக குழுத் தலைவர் லாம் ஜுன் கோய் தொலைபேசி மூலம் அந்தத் தகவலை தனக்குக் கூறியதாகவும் திரு சியா கூறினார்.

சிங்கப்பூரில் சென்ற செப்டம்பர் மாதம் புகைமூட்டப் பிரச்சினை ஏற்பட்டபோது இந்த மன்றம் திரு சியாவின் தலைமையின் கீழ் இதுவரையில் இல்லாத ஒரு நடவடிக்கையை எடுத்தது. புகைமூட்டத்தைக் கிளப்பிவிடுவோர் என்று கூறப்படுகின்ற நிறுவனங்களைச் சேர்ந்த பொருட்களைத் தாங்கள் விற்கவில்லை என்பதை பற்றி அறிவிக்கும்படி அந்த மன்றம் சிங்கப்பூரில் செயல்படும் முக்கியமான சில்லறை வர்த்தக நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டது. சுற்றுப்புற மன்றத்தின் குழு விசாரணை அக்டோபர் 19ஆம் தேதி நடக்கும் என்று தெரிவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!