இந்தோனீசியாவில் கைதான சிங்கப்பூர் படகோட்டி மீது புதிய குற்றச்சாட்டு

இந்தோனீசியாவின் பிந்தான் தீவுக்கு அருகே தஞ்சுங் பெராக் கிட் கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்துவிட்டதாக இந்தோனீசிய குடிநுழைவுத் துறை அதிகாரிகள் சூ சியாவ் ஹுவாட் என்ற சிங்கப்பூரரை ஏப்ரல் 16ஆம் தேதி முதல் பிடித்து வைத்திருக் கிறார்கள். அந்தப் படகோட்டி குறைந்த பட்சம் மேலும் இரண்டு வாரங் களுக்கு தஞ்சோங் பினாங்கி லேயே காவலில் இருக்க வேண்டி யிருக்கும் என்று தெரிகிறது.

அவரை விடுவிப்பதா அல்லது அரசினர் தரப்பு தொடுத்துள்ள ஒரு புதிய குற்றச்சாட்டின் கீழ் அவரை விசாரிப்பதா என்பதை பற்றி அக்டோபர் 25ஆம் தேதி தான் அந்த மாவட்ட நீதிமன்றம் முடிவு செய்யும். இதனால் தொடர்ந்து அவர் அங்கேயே காவலில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. அத்துமீறி நுழைந்த குற்றச் சாட்டிலிருந்து திரு சூ ஜூலை மாதம் விடுவிக்கப்பட்டார். ஆனால் அந்த வட்டார அதிகாரி கள் அவரை விடுவிக்க மறுத்து விட்டார்கள். அவர் மீது இப்போது புதிய குடிநுழைவு குற்றச்சாட்டு சுமத்தப் பட்டு இருக்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!