வீவகவின் பற்றாக்குறை $1.6 பில்லியன்

வீடமைப்பு வளர்ச்­சிக் கழகத்தின் பற்­றாக்­குறை முடி­வடைந்த 2015/2016க்கான நிதி­யாண்­டில் 1.639 பில்­லி­யன் வெள்ளியாக குறைந்தது என்று நேற்று வெளி­யிட்ட ஆண்ட­றிக்கை­யில் தெரி­வித்தது. வீட்டு உரிமம் தொடர்­பில் மட்டும் கழ­கத்­திற்கு ஏற்­பட்ட பற்­றாக் ­குறை $1.179 பில்லியன். வீடு­களின் விற்பனை, வீடு கள் வாங்குவதன் தொடர்பில் வழங்கப்பட்ட மசே நிதியின் வீட்டு மானி­யங்கள், இன்னும் கட்டி முடிக்­கப்­ப­டாத வீடுகளால் ஏற்படும் இழப்பு ஆகியவையால் பற்­றாக்­குறை ஏற்­பட்­ட­தாகக் கழகம் விளக்­கி­யது.

எனினும் முந்திய நிதி­யாண்­டுடன் ஒப்பிடுகையில் இந்த நிதியாண்டில் பற்றாக்குறை 32.7% குறைவு. சென்ற நிதி­யாண்­டில் பற்றாக்குறை தொகை $1.753 பில்­லி­யனாக இருந்தது. விற்பனைக்கு வரும் புதிய வீடு­களின் எண்­ணிக்கை குறைந்ததே இந்த இறக்­கத்­திற்குக் கார­ண­மென்று கழகம் விவ­ரித்­தது. பொதுக் குடி­யி­ருப்பு சந்தை நிலைப்­பட்டு வரும் அறி­கு­றிகள் தொடர்ந்து தென்­பட்டு வரு­வ­தால் கழகம் 2014ஆம் ஆண்டிலிருந்து படிப்­ப­டி­யாக புதிய வீடுகளின் எண்­ணிக்கையைக் குறைத்து வந்துள்ளது. புதிய வீடு­களின் எண்­ணிக்கை படிப்­ப­டி­யா­கக் குறைக் ­கப்­பட்­ட­தால், குறைவான கட்டுமான குத்­தகை­கள் வழங்கப்பட்­டி ­ருந்தன. இந்தக் கார­ணங்க­ளால் தான் கடந்த நிதி­யாண்­டிற்­கா­ன பற்றாக்குறை குறைந்த­தாக கழகம் சொன்னது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அன்றைய தினம் காலை 11 மணி முதல் தங்களது பள்ளிகளில் மாணவர்கள் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

14 Nov 2019

பிஎஸ்எல்இ தேர்வு முடிவுகள் நவம்பர் 21ல் வெளியீடு

லோரோங் செசுவாயில் ஒரு காருக்குள் சிறுவன் அசைவின்றிக் கிடந்ததாகவும் காருக்கு அருகில் 41 வயது மாது அசைவின்றிக் கிடந்ததாகவும் கூறப்பட்டது. படங்கள்: ஷின் மின்

14 Nov 2019

புக்கிட் தீமா தடைசெய்யப்பட்ட பகுதியில் சிறுவன், பெண் ஆகியோரது சடலங்கள்

தோ பாயோ லோரோங் 5ல் உள்ள புளோக் 64 அருகே குடிபோதையில் கலாட்டா செய்த ஆடவரை மடக்கிப் பிடித்து கைது செய்த போலிசார். படம்: சாவ்பாவ்

14 Nov 2019

குடிபோதையில் கத்தியை சுழற்றிய ஆடவர் கைது