லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

‘மைக்ரோ 2000 டெக்னாலஜி’ நிறுவனத்தைச் சேர்ந்த இரு ஊழியர்கள் மீது நேற்று நீதிமன்றத்தில் லஞ்ச ஊழல் குற்றச் சாட்டு சுமத்தப்பட்டது. அந்நிறுவனத்தின் முன்னைய வாடிக்கையாளர் சேவை அலுவலர்களின் அணித் தலைவ ரான இங் ஜுன் சியாங் என்பவர் $238,530 தொகையை லஞ்சமாகப் பெற்றதாக அவர் மீது 26 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஐபோன் கைபேசிகளை மாற்றித் தருவது தொடர்பில் நிறுவனத்தின் நடைமுறை விதிகளுக்கு முரணாகச் செயல்பட்ட அதிகாரிகள் பற்றி மேலிடத்தில் தெரிவிக்காமல் இருப்பதற்காக அவர் அந்தப் பணத்தைப் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

மற்றோர் ஊழியரான டான் கிம் சோங் டோனி என்பவரும் வாடிக்கையாளர் அலுவலர் அணித் தலைவராகப் பணியாற்றியபோது 18,750 வெள்ளியை லஞ்சமாகப் பெற்றார் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவர் மீது 22 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஏற்கெனவே ‘மைக்ரோ 2000 டெக்னாலஜி’ நிறுவனத்தைச் சேர்ந்த ஆறு பேர் மீது கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு செப்டம்பர் 15ஆம் தேதி தண்டனை விதிக்கப்பட்டது. $900 முதல் $12,000 வரை யிலான அபராதம் அவர்களுக்கு விதிக்கப்பட்டது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மின்ஸ்கூட்டர் தடை: பாதிக்கப்பட்ட உணவு விநியோக ஓட்டுநர்களுக்கு ஆதரவாக 100க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் குரல் கொடுத்துள்ளனர். (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

18 Nov 2019

உணவு விநியோக ஓட்டுநர்களுக்கு மாணவர்கள் ஆதரவுக் குரல்

‘கியட் ஹொங் குளோஸ்’ (Keat Hong Close) பகுதியில் அமைந்திருக்கும் புளோக் 805ல் இருக்கும் தடுப்பு வேலி ஒன்றில் டாக்சி மோதிய சம்பவம் படங்கள்: ஸ்டாம்ப்

18 Nov 2019

தடுப்பு வேலியில் மோதிப் பெண் டாக்சி ஓட்டுநரும் பயணியும் காயம்

தீயைக் கட்டுக்குள் கொண்டுவர உழைக்கும் தீயணைப்பு வீரர்கள் (படங்கள்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை/ ஃபேஸ்புக்)

18 Nov 2019

தை செங் எம்ஆர்டி நிலையம் அருகே தீ