முதல்முறையாக தீபாவளி ரயில்

தீபாவளித் திருநாளை கருப்பொருளாகக் கொண்டு அலங்கரிக்கப் பட்ட சிறப்பு ரயில் ஒன்று வடக்கு =கிழக்கு ரயில் பாதையில் விடப் பட்டுள்ளது. சிங்கப்பூரில் அத்தகைய ரயில் ஒன்று சேவையில் விடப்படு வது இது முதல்முறை. லிஷா எனப்படும் லிட்டில் இந் தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் ஆலோசனையுடன் நிலப் போக்குவரத்து ஆணையம் இந்த அலங்கார ரயிலை விட்டுள் ளது. போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் தீபாவளி அலங்கார ரயிலை நேற்று முன்தினம் அறி முகம் செய்து வைத்து அதில் பயணமும் செய்தார்.

நவம்பர் மாத நடுப்பகுதி வரை ரயிலில் தீபாவளி அலங்காரம் நீடிக்கும். வண்ண விளக்குகள், தோரணங்கள், அழகு மயில்கள், கண்கவர் தாமரை மலர்கள், பளிச்சிடும் இந்திய ஆபரணங்கள் ஆகியவற்றைக் கொண்டு ரயிலில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர்த்து, முதல்முறையாக லிட்டில் இந்தியா எம்ஆர்டி நிலை யத்திலும் தீபாவளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு ரயில்கள், டவுன்டௌன் ரயில்கள் ஆகியவற்றுக்கான ரயில் நிலைய நடைமேடைகளிலும் அலங் காரத்தைக் காணலாம். ஏற்கெனவே தீபாவளியை முன்னிட்டு 1,500,000 எல்இடி விளக்குகளுடன் லிட்டில் இந்தியா வட்டாரம் வண்ணமயமாக மின்னும் வேளையில் அலங்கார ரயி லும் ரயில் நிலையமும் அவற் றுக்குச் சிறப்புச் சேர்க்கின்றன. "ரயில் நிலையத்தை அடைந்த உடனேயே தீபாவளி வந்துவிட்டது என்ற கொண்டாட்ட உணர்வைத் தருகிறது.

தீபாவளி அலங்கார ரயிலில் பயணம் செய்த போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் (இடமிருந்து இரண்டாவது) லிஷா தலைவர் ராஜ்குமார் சந்திராவுடன் உரையாடுகிறார். படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!