ஸ்கில்ஸ்ஃபியூச்சர் ஊக்கமூட்டும் தொடக்கம்: இதுவரையில் 80,000 பேர், $22.5 மில்லியன்

சிங்கப்பூரர்கள் தங்கள் தேர்ச்சி களை மேம்படுத்திக்கொள்ள உதவ ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ என்ற ஒரு திட்டத்தை அரசாங்கம் அமல் படுத்தியுள்ளது. அந்தத் திட்டத் தின் கீழ் ஏராளமான பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கிய ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டம், 25ம் அதற்கும் அதிக வய துள்ள 2 மில்லியனுக்கும் அதிக மான சிங்கப்பூரர்களுக்கு உரியது. தேர்ச்சிகளைக் கற்க இந்தத் திட்டத்தின்படி அரசாங்கம் ஒவ் வொருவருக்கும் தொடக்கமாக $500 கொடுக்கிறது.

இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இந்தத் திட்டத்தில் 80,000 பேருக்கும் அதிக மக்கள் பதிந்துகொண்டிருக்கிறார்கள். மொத்தத்தில் அவர்கள் $22.5 மில்லியன் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் தொகையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய தேதியில் பார்க்கை யில், பெரும்பாலான சிங்கப்பூரர்கள் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டத்தை இனிமேல்தான் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இருந்தாலும் தொடக்கம் ஊக்கமூட்டுவதாக இருக்கிறது என்று ஸ்கில்ஸ் ஃபியூச்சர் தெரிவித்துள்ளது. எந்த வகை தேர்ச்சிகள், எந்த வகை பயிற்சிகள் தேவை என்பதை நன்கு புரிந்துகொண்டு அதற்குப் பிறகு அந்தத் தேர்ச்சி, பயிற்சியைப் பெற ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட் டத்தைப் பயன்படுத்திக்கொள்வது சிறப்பானது என்பதால் இதில் அவசரம் காட்டவேண்டாம் என்று ஸ்கில்ஸ்ஃபியூச்சர் தெரிவித்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கப்பலில் இருந்த மருத்துவ உதவிக்குழு இதய சுவாசமூட்டல் உட்பட பல்வேறு சிகிச்சைகள் அளித்தபோதும் சிறுவனை உயிர்ப்பிக்க முடியவில்லை என்று பேச்சாளர் குறிப்பிட்டார். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Nov 2019

சிங்கப்பூரிலிருந்து கிளம்பிய சொகுசுக் கப்பலின் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் மரணம்

காணொளி பதிவேற்றப்படுவதற்கு முன்பாக புகைப்படம் அந்த இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. படம், காணொளி: ‘ஃபிக்சீஎஸ்ஜிமீம்ஸ்’ எனும் ‘மீம்’ இன்ஸ்டகிராம் பக்கம்

19 Nov 2019

நடைபாதைக் கூரையின்மீது மின்-ஸ்கூட்டர் ஓட்டிய இளையர்

மனைவியுடனான சிறு கருத்து வேறுபாடுகளுக்குக்கூட அவரை அடிக்கும் பழக்கம் கொண்ட ரிட்ஸுவான் மேகா அப்துல் ரஹ்மான், அந்தப் பழக்கத்தை மாற்றுவதற்காக கோபத்தை சிறுவன் மீது திருப்பியதாக தடயவியல் மனநோய் நிபுணரான மருத்துவர் சியோவ் எங்குவானிடம் தெரிவித்தார். படம்: ஃபேஸ்புக்

19 Nov 2019

கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டு இறந்த சிறுவன்: பாடம் புகட்ட எண்ணி உள்ளங்கையில் சூடுபோட்ட தந்தை