புக்கிட் தீமா இயற்கை வனப்பகுதி மீண்டும் திறப்பு

புக்கிட் தீமா இயற்கை வனப்பகுதி இரண்டு ஆண்டுகளாக நடந்த சீரமைப்புகளை அடுத்து நேற்று பொதுமக்களுக்கு முற்றிலும் திறந்துவிடப்பட்டது. இந்த இயற்கை வனப்பகுதி 2014 செப்டம்பர் மாதம் முற்றிலும் மூடப் பட்டது. இதன் சில பகுதிகள் கடந்த ஏப்ரலில் வார முடிவு நாட்களில் திறந்துவிடப்பட்டன. புக்கிட் தீமா இயற்கை வனப்பகுதி நேற்று முதல் முழுமையாக திறக்கப்பட்டிருப்ப தால் இயற்கை விரும்பிகள் இப்போது வாரம் ஏழு நாட்களிலும் இந்த இயற்கை வளத்தைச் சுற்றிப் பார்த்து மகிழலாம். தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங், ஹாலாந்து- புக்கிட் தீமா குழுத்தொகுதி அடித் தள ஆலோசகர்களுடன் நேற்று இந்த இயற்கை வனப்பகுதியைத் திறந்துவைத்தார்.

காட்டின் உயிரினங்களையும் இயற்கை வளத்தையும் காப்பாற்று கின்ற அதே நேரத்தில், வருகை யாளர்களுக்குப் புதுப்புது அனு பவங்களைத் தருகின்ற பல புதிய அம்சங்கள் இப்போது புக்கிட் தீமா இயற்கை வனப்பகுதியில் இருக் கின்றன. இந்த இயற்கைக் காட்டில் சில பகுதிகளில் காணப்பட்ட பலவீன மான நிலச்சரிவுப் பகுதிகள் பல புதிய நவீன முறைகளைப் பயன் படுத்தி வலுவூட்டப்பட்டிருக்கின் றன. அந்தப் பகுதிகளில் தாவரங் கள் வளர்க்கப்பட்டிருக்கின்றன. புக்கிட் தீமா இயற்கை வனப்பகுதி 1883ல் முதன்முதலாக தோற்றுவிக் கப்பட்டது. அது ஆசியான் பாரம்பரிய பூங்கா வாகத் திகழ்கிறது.

புக்கிட் தீமா இயற்கை வனப்பகுதியைத் தேசிய பூங்கா கழகம் 1992 முதல் நிர்வகித்து வருகிறது. பூங்காக் கழகம் இந்தக் வனப்பகுதியின் நிர்வாகத்தை எடுத்துக்கொண்டது முதல் இங்கு வருவோரின் வருடாந்திர எண் ணிக்கை 400,000 பேராக அதிக ரித்திருக்கிறது என்று இந்த கழகத்தின் மத்திய இயற்கை வளத்துறை இயக்குநர் ஷேரன் சான் குறிப்பிட்டார்.

மக்களை எட்டுவதற்கு அமல் படுத்தப்பட்ட வெற்றிகரமான செயல்திட்டங்களும் இதற்குக் காரணம். புக்கிட் தீமா காடு இரண்டு ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டபோது, இந்தக் காட்டின் ஊடே ஏற்படுத்தப்பட்டிருந்த வழி கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்ட தால் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. சேறு, சகதியைத் தவிர்த்துக்கொள்ள பலரும் அத்தகைய பாதைகளை விட்டு விலகிச் செல்லவேண்டியதாயிற்று.

புக்கிட் தீமா இயற்கை வனப்பகுதியில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள சவுத் வியூ பாதையில் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங்கும் (முன்புறம்) வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனும் (பின்னால்) நேற்று பொதுமக்களுடன் நடந்து சென்று இயற்கையை ரசித்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கோப்புப்படம்: நியூ கிரியேஷன் தேவாலயம்/ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

22 Nov 2019

$300 மில்லியனுக்கு கடைத் தொகுதியை வாங்கிய நியூ கிரியேஷன் தேவாலயம்

2012ல் கேரோசல் நிறுவனத்தை (இடமிருந்து) மார்கஸ் டான், குவெக் சியூ ருய், லுகாஸ் நூ ஆகியோர் தொடங்கினர். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

22 Nov 2019

‘கேரோசல்’ இணையத் தளத்தின் மதிப்பு ஒரு பில்லியன் வெள்ளியாக அதிகரிப்பு