உலகையே கவரும் நல்லிணக்கம்

சிங்கப்பூரின் பல இன, பல சமய சமூகத்தில் ஒருவர் மற்றொரு வரின் திருவிழாக்களை கொண் டாடி மகிழும் நல்லிணக்கம் நமது விலைமதிப்பில்லாத பெரும் சொத்து என்றும் இதை நாம் மறந்துவிடக்கூடாது என்றும் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித் திருக்கிறார். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தமிழ் முரசு நாளிதழ் சிங்கப்பூரின் 16 நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களை ஒன்று திரட்டி இந்த ஆண்டு தீபா வளியை நினைவை விட்டு அக லாத ஒன்றாக ஆக்குவதற்குத் திட்டமிட்டது.

இந்தத் திட்டத்தை நிறை வேற்ற உதவும்படி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான இந்திராணி ராஜாவை தமிழ் முரசு கேட்டுக்கொண்டது. மிக ஆவலுடன் அவர் முன் வந்தார். இனம், மொழி, சமயம் எல்லாவற்றையும் கடந்து சிங்கப் பூரின் நல்லிணக்கத்தைப் புலப் படுத்தும் வகையில் நாடாளு மன்ற இல்லத்திற்கு வெளியே பல வண்ண, பல வடிவ புடவை களில், கைகளில் குலுங்கும் வளையல்களுடன் 16 உறுப்பினர் கள் காட்சி தந்தது சிங்கப்பூரில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. நாடாளுமன்ற உறுப் பினர்களின் தோற்றங்கள் தமிழ் முரசின் ஆடை அலங்கார சிறப் பிதழை அலங்கரிக்கின்றன.

சிங்கப்பூரின் நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள், இனம், மொழி, சமயம் எல்லாவற்றையும் கடந்து தீபாவளி புடவையுடன் நல்லிணக்கத்தைப் புலப்படுத்திய காட்சி. படம்: திமத்தி டேவிட்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஓவியரின் கைவண்ணத்தில் 'அமராவதி நகர்' திட்டத்துக்காக வரையப்பட்ட மாதிரிப் படம். படம்: ஊடகம்

13 Nov 2019

'அமராவதி நகர்' திட்டம் கைவிடப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு

‘ஸ்டூண்ட்- ரன் பார்க்’ நடவடிக்கையில் சுமார் 40 மாணவர்கள் ஈடுபட்டனர். வகுப்பில் கற்றவற்றை நடைமுறைப்படுத்திப் பார்த்ததுடன் பல்வேறு புதுமைகளையும் அவர்கள் கையாண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

13 Nov 2019

மாணவர்கள் நிர்வகிக்கும் பூங்கா திட்டம் விரிவடைகிறது