ரயில் கோளாறு: கிளமெண்டி, ஜூரோங் ஈஸ்ட் நிலையங்களில் தாமதங்கள்

கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் சென்ற ஒரு ரயிலில் ஏற்பட்ட கோளாற்றினால், ஜூரோங் ஈஸ்ட், கிளமெண்டி நிலையங்களில் நேற்றுக் காலை தாமதம் ஏற்பட்டது. காலை உச்ச நேரத்தில் அவ்விரு நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது என்று சமூக ஊடகங்களில் செய்தி பரவியது. “ஜூரோங் ஈஸ்ட் நிலையத்திலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் ரயிலில் நேற்றுக் காலை 6.50 மணிக்கு சமிக்ஞை கோளாறு ஏற்பட்டது. அந்தக் கோளாற்றை ரயில் ஓட்டுநர் கண்டுபிடித்து, ரயிலை மீண்டும் ஜூரோங் ஈஸ்ட் நிலை யத்துக்குத் திருப்பினார். பின்னர் ரயிலில் இருந்து பயணிகள் இறக்கி விடப்பட்டு, ரயில் சேவையிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டது.

“காலையில் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு நாங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொள் கிறோம். இது பற்றிய விசாரணை தொடங்கி உள்ளது,” என்று தெரிவித்தார் எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் தகவல் தொடர்புப் பிரிவின் துணைத் தலைவர் பேட்ரிக் நாதன். கிழக்கு=மேற்கு பாதையில் ஒரு வாரத்தில் ஏற்பட்டிருக்கும் மூன்றாவது கோளாறு இது. கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த ரயில் கோளாற்றால் தானா மேரா, பூகிஸ் நிலையங்க ளுக்கிடையே 20 நிமிட தாமதம் ஏற்பட்டது. மூன்று நாள் கழித்து மேற்கு செல்லும் பாதையில் டோவர் நிலையத்துக்கு அருகே காலை நேரத்தில் ரயிலின் ‘பிரேக்’ முறையில் ஏற்பட்ட கோளாற்றால் குவீன்ஸ்டவுன், ஜூரோங் ஈஸ்ட் நிலையங்களுக்கு இடையிலான பயண நேரம் அதிகரித்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிறுவன் அடைத்து வைக்கப்பட்டிருந்த கூண்டு. படம்: நீதிமன்ற ஆவணங்கள்

15 Nov 2019

துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்ட சிறுவன்: உடனடி சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம்

பாதிக்கப்பட்டவர்களைப்போல, மல்கர்-பிரியங்கா தம்பதி நம்பத்தகுந்த சாட்சியங்களாக இல்லை என்று நேற்றுத் தீர்ப்பு வாசித்தபோது மாவட்ட நீதிபதி சைஃபுதீன் சருவான் கூறினார். கோப்புப்படம்

15 Nov 2019

வெளிநாட்டு ஊழியர்களின் உழைப்பைச் சுரண்டிய இந்தியத் தம்பதி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்

கடந்த ஏப்ரல் மாதத்தில் செயல்படத் தொடங்கிய ஜுவல் வளாகத்தை 50 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். படம்: சாவ் பாவ்

15 Nov 2019

அனைத்துலக அளவில் சிறப்பு விருது பெற்று மேலும் மிளிர்கிறது ‘ஜுவல்’