ராடின் மாஸில் கொசுக்கள் வராத சாயம் பூசும் இயக்கம்

ராடின் மாஸ் தொகுதியில் உள்ள 216 வாடகை வீடுகளில் கொசுக்களுக்கு எதிரான சாயத்தைப் பூசும் இயக்கம் ஒன்றை அம லாக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. அந்த இயக்கத்தைத் தொடங்கும் வகையில் நேற்று சுமார் 250 தொண்டூழியர்கள் இத்தொகுதி யில் உள்ள 36 வாடகை வீடுகளில் கொசுக்கள் நாடாத சாயத்தைப் பூசினர். ராடின் மாஸ் அடித்தள அமைப்புகளும் கன்சாய் சாய நிறுவனமும் சேர்ந்து இந்த இரண்டு ஆண்டு இயக்கத்தைத் தொடங்கி உள்ளன.

பிரதமர் அலுவலகம், மனிதவள துணை அமைச்சர் சேம் டான், நேற்று ஜாலான் புக்கிட் மேராவில் உள்ள புளோக் 105ல் இந்த இயக் கத்தைத் தொடங்கி வைத்தார். அரசாங்க அமைப்புகள், தனி யார் துறை, மாணவர்கள், இதர தொண்டூழியர்கள் ஆகியோர் இந்த இயக்கத்தில் ஈடுபட்டு வரு கிறார்கள்.

ராடின் மாஸ் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினருமான திரு சேம் டான், “கொசுக்களுக்கு எதிரான இந்தச் சாயம் பூசும் திட்டம் குடியி ருப்பாளர்களைக் கொசுக்களிடம் இருந்து காப்பாற்றுகிறது. அதோடு மட்டுமின்றி இந்த வட்டார வீடு களுக்குப் புதிய ஒளிமயமான பொலிவையும் அளிக்கிறது,” என்று தெரிவித்தார். ரினோஓர்க்ஸ், மேக்ஷாம் பெஸ்ட் மேனேஜ்மெண்ட் ஆகிய நிறுவனங்களும் இந்தத் திட்டத் தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றன.

பிரதமர் அலுவலகம், மனிதவள துணை அமைச்சரும் ராடின் மாஸ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான சேம் டான் (வலது), ஜாலான் புக்கிட் மேரா புளோக் 106ல் உள்ள ஒரு வீட்டில் கொசு எதிர்ப்பு சாயத்தைப் பூசுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டெம்பனிஸ் சென்ட்ரல் 7, புளோக் 524 ஏக்கு நீலநிற மறுபயனீட்டுத் தொட்டியில் உள்ள பொருட்களை எடுத்துச் செல்லும் கனரக வாகனம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

11 Nov 2019

மறுபயனீடு எளிதாகிறது