உற்பத்தித்திறன் மேம்பட்டால் போட்டித்தன்மை உயரும்

மலிவான அல்லது மேம்பட்ட பொருட்கள், சேவைகள் வழங்கு வதில் சிங்கப்பூரின் போட் டித்தன்மை முன்னேற்றம் நாளடை வில் மங்கிப் போகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மலிவான போட்டியாளர்கள் உயர்வான கல்வித் தேவைகளைக் கொண்டு மேன்மையடைகிறார்கள். மாறாக, மேம்பட்ட போட்டியாளர்கள் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் உத வியுடன் மலிவாகக் கிடைக்கிறார் கள் என்று எச்சரித்தார் மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே.

சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேள னத்தின் ஏற்பாட்டில் நேற்று தொடங்கிய இரண்டு நாள் சிங்கப்பூர் உற்பத்தித்திறன் மாநாடு, கண்காட்சியில் அமைச்சர் உரையாற்றினார். சிங்கப்பூரின் உற்பத்தி கடந்த இரண்டு ஆண்டுகளாக எவ்வித வளர்ச்சியும் காணாமல் தேங்கியி ருக்கிறது என்று எச்சரித்த திரு லிம், உள்ளூர் ஊழியரணியில் எவ்வித வளர்ச்சியும் ஏற்படாத நிலை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் பாதித்தது என்றார்.

 

நேற்று நடைபெற்ற சிங்கப்பூர் உற்பத்தித்திறன் மாநாடு, கண்காட்சி யில் மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே, ‘எச்பி’ நிறுவனத்தின் காட்சிக்கூடத்தைப் பார்வையிடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிங்கப்பூர் நாணய ஆணைய பசுமை செயல்திட்டத்தின் பல புதிய முயற்சிகளை நேற்று தொடங்கி வைத்துப் பேசினார் கல்வி அமைச்சர் ஓங் யி காங் . படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Nov 2019

பருவநிலை பசுமை திட்டங்களுக்கு US$2 பில்லியன் முதலீடு

கூடுதல் வசதிகளுடன் கூடிய புதிய மின்சாரப் பேருந்துகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Nov 2019

அடுத்த ஆண்டு துவக்கத்திலிருந்து 60 மின்சாரப் பேருந்துகள்

குடிபோதையில் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த அலிஃபை மடக்கிப் பிடித்து கைது செய்த போலிசார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ஃபேஸ்புக்

12 Nov 2019

குடிபோதையில் வாக்குவாதம்: பாடகர் அலிஃப் அசிஸ் கைது